தோனி எடுத்த அந்த முடிவால நான் ரிட்டயர்டு ஆய்டலாம்னு நெனச்சேன் – பழைய நினைவை பகிர்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2013 வரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவரது புகழ் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் உள்ளது. அந்த அளவிற்கு தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் இன்றளவும் ஒரு மதிப்புமிக்க வீரராகவே பார்க்கப்பட்டு வருகிறார்.

Sehwag

- Advertisement -

இந்நிலையில் சேவாக்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவம் குறித்து தற்போது தனது பழைய நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : 2008ஆம் ஆண்டு நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்பினேன். ஏனெனில் அப்போது நாங்கள் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்த போது டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நான் ஒருநாள் போட்டிகளில் ரன் எடுக்க முடியாமல் திணறி வந்தேன். நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியாததால் தோனி என்னை விளையாடும் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கினார்.

அந்த செயலால் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாட விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்போது சச்சின் டெண்டுல்கர் என்னை தடுத்து நிறுத்தி இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். உங்களது காலம் வரும் வரை காத்திருங்கள் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். இந்த சுற்றுப் பயணத்திற்கு பிறகு நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்று நன்றாக யோசித்து முடிவெடுங்கள் என்று கூறினார்.

sehwag 1

அவர் கூறியது போலவே நான் மீண்டும் வீட்டிற்கு திரும்பி யோசித்த பிறகு ஓய்வு முடிவை கை விட்டேன். அதிர்ஷ்டவசமாக அப்போது நான் ஓய்வு அறிவிக்கவில்லை என்று கூறினார். அவர் குறிப்பிட்ட அந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளிலும் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அதன்பிறகு இந்திய அணிக்கு திரும்பிய அவர் மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். அதோடு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடி இருந்தார்.

- Advertisement -

மேலும் 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏழு முதல் எட்டு ஆண்டுகள் இந்திய அணிக்காக அவர் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ள சூழலில் விராட் கோலியின் பார்ம் மற்றும் அவருக்கு ஓய்வு தேவையா? என்ற கேள்விக்கும் பதிலளித்த சேவாக் கூறுகையில் : கிரிக்கெட்டில் இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள். ஒன்று சவால்களை விரும்புவர்கள் அவர்களில் ஒருவர்தான் விராட்கோலி. எந்த விமர்சனங்களையும் கேட்டுக்கொண்டு அதனை தனது பேட்டிங்கின் மூலம் பதிலளிக்க கூடியவர்.

இதையும் படிங்க : தல தல தான் ! ஸ்பெஷல் ரசிகையின் கண்ணீரை துடைத்த தோனி – ரசிகர்கள் நெகிழ்ச்சி (விவரம் இதோ)

மற்றொரு வகை வீரர்கள் விமர்சனங்களால் பாதிக்கப்படாதவர்கள். ஏனென்றால் யார் விமர்சித்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாட வேண்டும் என்று விருப்பப்பட்டு விளையாடுபவர்கள். அந்த வகையில் நானும் ஒருவன் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement