ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமாக திகழ்ந்த வெளிநாட்டு கேப்டன்களின் பட்டியல் இதோ – உங்க பேவரைட் யாரு?

Warner Warne
- Advertisement -

ரசிகர்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது,

ipl

- Advertisement -

வெளிநாட்டு கேப்டன்கள்:
பொதுவாக ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்களின் பங்கு அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில அணிகள் எப்போதுமே தங்களின் கேப்டனாக ஒரு வெளிநாட்டவரை நியமித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த வருடம் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்தை சேர்ந்த கேப்டன் கூல் கேன் வில்லியம்சன் செயல்பட உள்ளார்.

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா, எம்எஸ் தோனி போன்ற இந்திய கேப்டன்கள் அளவுக்கு வெளிநாட்டு கேப்டன்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றது கிடையாது என்றே கூறலாம். இருப்பினும் தங்களது அபார திறமைகளால் ஐபிஎல் தொடரிலும் கலக்கிய ஒரு சில வெளிநாட்டு கேப்டன்களை பற்றி பார்ப்போம்.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

1. ஷேன் வார்னே : சமீபத்தில் மாரடைப்பால் காலமான ஆஸ்திரேலியாவின் மகத்தான முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கடந்த 2008-ஆம் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்தார். அந்த தொடரில் மும்பை போன்ற இதர அணிகளில் மிகப் பெரிய நட்சத்திரங்கள் இருந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா என பெரும்பாலும் இளம் வீரர்களே நிறைந்திருந்தார்கள்.

- Advertisement -

அந்த அனுபவம் இல்லாத வீரர்களையும் வைத்துக்கொண்டு அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் தலைமையிலான ராஜஸ்தான் லீக் சுற்றில் அசத்தி அதன் பின் நடந்த இறுதிப்போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்து வரலாற்றின் முதல் சாம்பியனாக சாதனை படைத்தது. மொத்தத்தில் ராஜஸ்தான் அணிக்காக 56 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த ஷேன் வார்னே அதில் 1 சாம்பியன் பட்டம் உட்பட 36 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

Gilchrist 1

2. ஆடம் கில்கிறிஸ்ட்: ஷேன் வார்னேவை போலவே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட காலங்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். குறிப்பாக 2009-ஆம் ஆண்டு அந்த அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அவர் அதன்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் கேப்டன்ஷிப் செய்தார். மொத்தம் 76 போட்டிகளில் 35 வெற்றிகளை பதிவு செய்துள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளுக்கு கேப்டன்சிப் செய்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

3. டேவிட் வார்னர் : ஷேன் வார்னே, கில்கிறிஸ்ட் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மற்றொரு நட்சத்திரம் டேவிட் வார்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். இதுநாள் வரை ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை தவிர வேறு எந்த வீரர்களும் கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.

david

கேப்டனாக மலைபோல ரன்களை அடித்து சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்ததையும் மறந்த ஹைதராபாத் அணி நிர்வாகம் அவரை இந்த ஆண்டு கழட்டிவிட்டு உள்ளதால் ஏற்கனவே விளையாடிய டெல்லி அணிக்காக அவர் விளையாட உள்ளார். அந்த வகையில் டேவிட் வார்னர் ஏற்கனவே டெல்லி அணிக்கு இதற்கு முன் 2 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். மொத்தத்தில் 67 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 1 சாம்பியன் பட்டம் உட்பட 35 போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

4. ஜார்ஜ் பெய்லி : இந்த பட்டியலில் மீண்டும் ஒரு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர் ஜார்ஜ் பெய்லி இடம் பெற்றுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கேப்டன்ஷிப் செய்த அவர் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. மொத்தம் 2 சீசன்கள் அந்த அணியை வழிநடத்திய அவர் 35 போட்டிகளில் 18 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

vettori

5. டானியல் வெட்டோரி: இங்கிலாந்தைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் டேனியல் வெட்டோரி விராட் கோலிக்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தவர். அவர் தலைமையில் 28 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு 15 வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக 2011-ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

6. இயன் மோர்கன் : இங்கிலாந்துக்காக வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திரம் இயன் மோர்கன் கடந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனாக வழிநடத்தினார். அவர் தலைமையில் கடந்த வருடம் ஆரம்பத்தில் தடுமாறினாலும் இறுதியில் அசத்திய கொல்கத்தா பைனலுக்கு தகுதி பெற்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. கடந்த வருடம் வரை 24 போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு கேப்டன் செய்த இவர் 12 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். இருப்பினும் இவரை இந்த வருடம் கொல்கத்தா உள்ளிட்ட எந்த அணியும் வாங்காதது குறிப்பிடத்தக்கது.

cskvskkr

7. கேன் வில்லியம்சன்: நியூஸிலாந்தின் நட்சத்திரம் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் கடந்த 2018-ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தடைபெற்றதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழி நடத்தினார். அந்த சீசனில் அபாரமாக செயல்பட்ட அவர் ஹைதராபாத் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க : அம்பயருக்கு கண் டெஸ்ட் வைங்க ! நியாயமில்லாமல் அவுட் கொடுத்த அம்பயரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

இதுவரை 33 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் 16 வெற்றிகளை பதிவு செய்த காரணத்தால் இந்த வருடம் முதல் ஐதராபாத் அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement