அம்பயருக்கு கண் டெஸ்ட் வைங்க ! நியாயமில்லாமல் அவுட் கொடுத்த அம்பயரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Catch IPL 2022
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29-ஆம் தேதி நடைபெற்ற 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. புனே நகரிலுள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் அசத்திய ராஜஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்த ஹைதராபாத் அதற்கு ஏற்றார்போல் பந்து வீசவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் 35 (28), யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 (16) என அதிரடியான தொடக்கத்தை கொடுக்க அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதைவிட அதிரடியாக விளையாடி வெறும் 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்களை விளாசினார்.

- Advertisement -

ஹைதெராபாத் பரிதாப தோல்வி:
அவருடன் ஜோடியாக தேவுட் படிக்கல் 41 (29) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் வெறும் 13 பந்துகளில் 3 சிக்ஸர் உட்பட 32 ரன்களை விளாசினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 210 ரன்களை குவித்தது. அதன்பின் 211 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 2 ரன்களுக்கு அவுட் செய்த ராஜஸ்தான் அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி, நிக்கோலஸ் பூரன் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தது.

போதாக்குறைக்கு அந்த அணி பெரிதும் எதிர்பார்த்த இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா 9 ரன்களிலும் அப்துல் சமத் 4 ரன்களிலும் நடையை கட்டியதால் 10 ஓவர்களில் 37/5 என திண்டாடிய ஐதராபாத் அணியின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது. இருப்பினும் நடுவரிசையில் ஐடன் மார்க்ரம் 41 பந்துகளில் 57* ரன்களும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வெறும் 14 பந்துகளில் 40 ரன்கள் அடித்து தங்கள் அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார்கள். இறுதிவரை 20 ஓவர்களில் 149/7 ரன்களை மட்டுமே எடுத்தது ஐதராபாத் முதல் போட்டியிலேயே படு மோசமான தோல்வியை சந்தித்தது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தது.

- Advertisement -

வில்லியம்சனுக்கு அநீதி இழைத்த அம்பயர்:
முன்னதாக இந்த போட்டியில் 211 என்ற இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக கேன் வில்லியம்சன் மற்றும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரை நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் அதிரடியாக வீசி முடிக்க 2-வது ஓவரை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசினார். முதல் ஓவரிலேயே தடுமாறிய கேன் வில்லியம்சன் பிரசித் கிருஷ்ணா அதிரடியாக வீசிய அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட போது அது பேட்டில் பட்டு எட்ஜ் வாங்கி விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் கையை நோக்கி சென்றது. ஆனால் அதை அவரால் பிடிக்க முடியாத அளவுக்கு பந்து வேகமாக வந்த காரணத்தால் அவரின் கையை மீறி வெளியே சென்ற நிலையில் நல்லவேளையாக முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொரு வீரர் தேவுட் படிக்கல் அதை தரையோடு தரையாக தாவி பிடித்தார்.

ஆனால் அதை பிடிப்பதற்குள் தரையில் பட்டதாக களத்தில் இருந்த அம்பயர்கள் உணர்ந்த காரணத்தால் அவுட் கொடுக்கவில்லை. எனவே அதைப் பற்றிய முடிவை எடுப்பதற்காக களத்திலிருந்த அம்பயர்கள் 3-வது அம்பயரை தொடர்பு கொண்டார்கள். அதன் பின் ஒருசில நிமிடங்கள் அதை ஆராய்ந்த 3-வது அம்பயர் மிக விரைவில் அவுட் என கொடுத்தது கேப்டன் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட ஹைதராபாத் வீரர்களுக்கும் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

அவுட் இல்லை:
ஏனெனில் ரிப்ளையில் பார்த்தபோது தேவுட் படிக்கல் பிடிப்பதற்கு முன்பாக ஒருசில வினாடிகள் பந்து தரையில் பட்டு லேசாக பவுன்ஸ் ஆனபின்பு தான் அவரின் கையில் தஞ்சம் அடைந்தது. அதை தெளிவாக பார்த்த அம்பயர் அவுட் கொடுத்ததில் எந்தவித நியாயமும் இல்லை என கூறும் ரசிகர்கள் கண்டிப்பாக இது அவுட் கிடையாது என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக அந்த தவறான அவுட்டை கொடுத்த கேரளாவைச் சேர்ந்த இந்திய அம்பயர் அனந்த பத்மநாபனை பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமெனில் களத்தில் விளையாடும் வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்கும் பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக அந்தப் போட்டியில் களமிறங்கும் அம்ப்யர்களின் கண்களையும் பரிசோதிக்க வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் வெளிப்படையாக பேசுகின்றனர்.

- Advertisement -

டெக்னாலஜி வளர்ந்த இந்தக் காலத்திலும் இதுபோன்ற தவறான முடிவுகள் அதுவும் ஐபிஎல் போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் கொடுப்பதை நினைத்தால் மிகவும் அதிர்ச்சியாக உள்ளதாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : கப் கூட வேண்டாம், இதை செய்ங்க – பெங்களூரு அணிக்காக விராட் கோலியிடம் கோரிக்கை வைத்த ஏபி டீ வில்லியர்ஸ்

ஏனெனில் இது போன்ற ஒரு தவறான முடிவு ஒரு அணியின் வெற்றியை தலைகீழாக மாற்றக் கூடலாம். அந்த வகையில் இந்த போட்டியில் கூட கேன் வில்லியம்சன் அவுட்டான பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் கடைசி வரை மீள முடியாமல் தோல்வி அடைந்தது.

Advertisement