கப் கூட வேண்டாம், இதை செய்ங்க – பெங்களூரு அணிக்காக விராட் கோலியிடம் கோரிக்கை வைத்த ஏபி டீ வில்லியர்ஸ்

- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வருடம் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டுப்லஸ்ஸிஸ் தலைமையில் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

Virat Faf Du Plessis

- Advertisement -

மீண்டெழுமா பெங்களூரு:
கடந்த காலங்களில் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு ஐபிஎல் கோப்பையை வாங்க முடியாமல் திணறி வரும் பெங்களூரு இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் புதிய கேப்டன் டு பிளேஸிஸ் தலைமையில் புதிய ஜெர்ஸியுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியது. அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக பங்கேற்ற தனது முதல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி அபாரமாக பேட்டிங் செய்து 205 ரன்கள் குவித்து அசத்தியது.

இருப்பினும் அதன்பின் மோசமாக பந்து வீசியதன் காரணமாக அதே 205 ரன்களை பஞ்சாப் அணிக்கு வாரி வழங்கிய பெங்களூரு பவுலர்கள் கையிலிருந்த நல்ல வெற்றியையும் தாரை வார்த்தனர். இதனால் முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வி அடைந்த பெங்களூரு தனது 2-வது போட்டியில் மார்ச் 30-ஆம் தேதியன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் கிடைத்த தோல்வியால் துவண்டு கிடக்கும் பெங்களூரு 2-வது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

RCB vs PBKS Extras

600 ரன்கள் அடிக்க வேண்டும்:
இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி குறைந்தது 600 ரன்களை அடித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த பல வருடங்களாக பெங்களூர் அணியில் விளையாடி வந்த அவர் அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்கேற்று பெங்களூரு மக்களில் ஒருவராகும் அளவுக்கு ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர்.

- Advertisement -

மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்சரை பறக்க விடும் திறமை பெற்ற அவரை ரசிகர்கள் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என கொண்டாடுகின்றனர். பெங்களூர் அணியில் கடந்த வருடம் வரை முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடி ஓய்வு பெற்ற அவர் விராட் கோலியுடன் இணைந்து பல முறை பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ABD

அப்படிப்பட்ட அவரின் நண்பரான தென்னாப்பிரிக்காவின் மற்றொரு நட்சத்திர வீரர் டு பிளேஸிஸ் தான் தற்போது பெங்களூர் அணியை வழி நடத்துகிறார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெங்களூரு அணிக்காக டு பிளேஸிஸ் கேப்டனாக விளையாட வந்துள்ளதை அனைவரும் அறிவோம். அதைவிட கேப்டன் பதவியில் இல்லாத காரணத்தால் எந்தவித அழுத்தமும் இல்லாமல் விராட் கோலி சுதந்திரமாக விளையாட உள்ளது மிகுந்த ஆவலான ஒன்றாகும். எனவே இந்த சீசனில் அவரிடமிருந்து பெரிய அளவில் எதிர்பார்க்கிறேன். இந்த வருடம் அவரிடம் இருந்து 600+ ரன்களை எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

கப் தாமாக வரும்:
கடந்த 2013 – 2021 வரை பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி பேட்டிங்கில் அதிரடியாக மலைபோல ரன்களை குவித்து முழு மூச்சுடன் போராடிய போதிலும் ஒரு முறை கூட கோப்பையை வாங்கி தர முடியவில்லை. இதனால் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் பணிச்சுமை காரணமாக சமீபத்தில் இந்தியாவின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது பெங்களூரு கேப்டன் பதவிக்கும் முழுக்கு போட்டார். எனவே தற்போது நீண்ட நாட்கள் கழித்து கேப்டன்ஷிப் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாட இருக்கும் விராட் கோலி குறைந்தது இந்த வருடம் 600 ரன்கள் அடிப்பார் என எதிர்பார்ப்பதாக டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ABD

அவர் சிறப்பாக விளையாடி 600 ரன்களை எடுத்தால் கோப்பை தாமாகவே பெங்களூருவின் கைக்கு வந்து சேரும் என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். அவர் கூறுவது போல இந்த வருடம் சுதந்திர பறவையாக விளையாடத் துவங்கியுள்ள விராட் கோலி பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 29 பந்துகளில் 41* ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியில் அந்த தமிழக வீரரை துவக்க வீரராக களமிறக்குங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை

மேலும் ஏற்கனவே கடந்த 2016 ஐபிஎல் தொடரில் தனி ஒருவனாக 973 ரன்கள் குவித்து சரித்திர சாதனை படைத்த விராட் கோலி கண்டிப்பாக இந்த வருடம் 600 ரன்களை அடிப்பதற்கு தகுதியானவர் என்றே கூறலாம்.

Advertisement