சர்வதேச வரலாற்றில் தேசத்துக்காக கிரிக்கெட்டில் விளையாடிய கணவன் – மனைவி ஜோடிகள், சிறப்பு பதிவு

- Advertisement -

விளையாட்டுத் துறையில் நாட்டுக்காக ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் விளையாடுவதே மிகப்பெரிய சவால் நிறைந்த சாதனையாகும். ஏனெனில் அதுவரை செய்து வந்த பாரம்பரிய தொழில்களை விட்டு விளையாட்டின் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் அதில் முழுமையாக ஈடுபடுவதற்கு பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது முக்கியமான ஒன்றாகும். ஆரம்பத்திலேயே அந்த ஆதரவு கிடைத்தால் நிச்சயம் ஆர்வமுடைய யாராக இருந்தாலும் விளையாட்டு துறையில் சாதிக்கலாம். அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு துறையில் விளையாடும் வீரர்கள் தேசத்துக்காக விளையாட வேண்டும் என்ற மிகப்பெரிய லட்சியத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு நாளடைவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அதன் பரிசாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பொன்னான வாய்ப்பை பெறுவார்கள்.

பெரும்பாலான வீரர்கள் தங்களது இளமை காலங்களில் நாட்டிற்காக விளையாடி சாதித்த பின்புதான் திருமணம் எனும் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவார்கள். அந்த ஆயிரங்காலத்து பயிரை வளர்ப்பதற்கு தங்களுக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை துணையையே அனைவரும் தேர்வு செய்வார்கள். அந்த நிலைமையில் காலம் காலமாக வீட்டுடன் சமையல் செய்துகொண்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வகையிலான பெண்களையோ அல்லது வேறு ஏதேனும் துறையில் பணிபுரியும் பெண்களை தான் பெரும்பாலான வீரர்கள் மணப்பார்கள். ஆனால் அரிதினும் அரிதாகத்தான் தம்மைப் போலவே இளம் வயது முதல் கடுமையாகப் போராடி சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டில் விளையாடி நாட்டுக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுக்கும் வீராங்கனைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள்.

- Advertisement -

காதல் கிரிக்கெட்:
அந்த வகையில் ஒரு கிரிக்கெட் வீரருக்கு தம்மை போன்றே கிரிக்கெட் விளையாடும் வீராங்கனை மனைவியாக கிடைத்தால் அதை விட சொர்க்கமான வாழ்வு கிடைக்காது என்றே கூறலாம். ஒரு கட்டத்தில் நாட்டுக்காக இணைந்து விளையாடும் வாய்ப்பை பெறும் அந்த அரிதான ஜோடிகள் விளையாட்டுப் போட்டியில் விளையாடுகிறார்கள் என்பதைவிட நாட்டுக்காக குடும்பமாக இணைந்து சேவை செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் 145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கிரிக்கெட்டில் விளையாடிய கணவன் – மனைவி ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்:

5. ரோஜர் பிரிடேஸ் – ருத் வெஸ்ட்ப்ரூக்: கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்துக்காக உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் 25000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த ரோஜர் பிரிடேஸ் தனது தேசிய அணிக்காக 1968 – 1696 வரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் வாய்ப்பினை பெற்றார்.

- Advertisement -

ஆனால் அவருக்கு முன்னோடியாக அவரின் மனைவி ரூத் எமிலி வெஸ்ட்ப்ரூக் 1957 – 1963 ஆகிய காலகட்டத்திலேயே இங்கிலாந்துக்காக விக்கெட் கீப்பர் வீராங்கனையாக 11 மகளிர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அசத்தினார். அந்த வகையில் 60களில் ரசிகர்கள் அறிந்த கிரிக்கெட் ஜோடியாக இவர்கள் விளையாடியுள்ளார்கள்.

2. ரிச்சர்ட் ஹாட்லீ – கரேன் ஹாட்லீ: 80களில் இவரின் பெயரைக் கேட்டாலே அதிரும் என்ற வகையில் வரலாற்றின் மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக போற்றப்படும் நியூசிலாந்தின் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹாட்லீ வரலாற்றில் 400 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்த முதல் பவுலராக உலக சாதனை படைத்தவர்.

- Advertisement -

அதேபோல் இவரின் மனைவி கரேன் மார்ஷ் ஹாட்லீ 39 உள்ளூர் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடினார். இந்த ஜோடிக்கு 2 மகன்களும் பிறந்த நிலையில் பின்னாளில் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

3. கய் டீ சில்வா ஆல்விஸ் – ராசாஞ்சலி சந்திமா சில்வா: இந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும் ஒரே ஆசிய ஜோடியாக இலங்கையைச் சேர்ந்த கய் டீ சில்வா அல்விஸ் 1983 – 1988 வரையிலான காலகட்டத்தில் தேசிய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.

- Advertisement -

அவர் திருமணம் செய்துகொண்ட ராசாஞ்சலி சந்திமா சில்வா கடந்த 1997 – 2000 வரையிலான காலகட்டத்தில் இலங்கை மகளிர் அணிக்காக 1 டெஸ்ட் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோடியில் டி சில்வா கடந்த 2013இல் இயற்கை எய்திய நிலையில் அவரது பெயரில் ஒரு உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

4. மிட்சேல் ஸ்டார்க் – அலிசா ஹேலி: நவீன கிரிக்கெட்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த ஜோடி போட்டி போட்டுக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி மேல் வெற்றிகளையும் உலக கோப்பைகளையும் வாங்கி கொடுத்து வருகிறது என்றே கூறலாம். இதில் கடந்த 2010 முதல் உலக அளவில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் மிட்செல் ஸ்டார்க் இதுவரை 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து 2015 உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றி சிறந்த வீரராக வருகிறார்.

அவரின் மனைவி அலிசா ஹீலி சிங்க பெண்ணாக ஆஸ்திரேலிய மகளிர் அணியில் விக்கெட் கீப்பர் வீராங்கனையாக இதுவரை 5000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வருகிறார். 2020, 2022 ஆகிய உலக கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் மகளிர் கிரிக்கெட்டில் கணவனை மிஞ்சும் அளவுக்கு செயல்பட்டு வருகிறார். மொத்தத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றி கணவன் மனைவி ஜோடியாக இவர்கள் காலம் கடந்தும் பேசும் அளவுக்கு விளையாடி வருகிறார்கள்.

5. டொனால்ட் ட்ரிப்பானோ – சிப்போ முகேரி: ஜிம்பாப்வே அணிக்காக 15 டெஸ்ட் 38 ஒருநாள் மட்டும் 23 டி20 போட்டிகளில் ஆல்-ரவுண்டராக டோன்லட் ட்ரிப்பானோ விளையாடி வருகிறார்.

கடந்த 2019 முதல் மகளிர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே விளையாட தொடங்கிய நிலையில் அவரது மனைவி சிப்போ முகேரி இதுவரை ஜிம்பாப்வே தேசிய அணிக்காக 26 மகளிர் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

Advertisement