- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்த ரெய்னா கிடைச்சாச்சு, சுரேஷ் ரெய்னாவுக்கும் திலக் வர்மாவுக்கும் இடையே 7 ஒற்றுமைகள் – இதை பாத்தீங்களா

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும் திலக் வர்மா எனும் திறமையான வீரர் கிடைத்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஹைதராபாத்தை சேர்ந்த அவர் கடந்த 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் விளையாடி கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக இத்தொடரில் அறிமுகமானார். அதில் சவாலான மைதானங்களில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது அபாரமாக பேட்டிங் செய்த அவர் 153 ரன்கள் குவித்து இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.

மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை தகர்த்த அவர் கடைசி போட்டியில் நிக்கோலஸ் பூரானை தம்முடைய முதல் ஓவரிலேயே பந்து வீச்சிலும் அவுட்டாக்கினார். அப்படி இத்தொடர் முழுவதுமே அதிரடியான பேட்டிங், தேவைப்படும் நேரத்தில் பவுலிங், துடிதுடிப்பான ஃபீல்டிங் என 3 வகையான துறைகளிலும் அசத்திய அவர் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை நினைவுபடுத்தும் வகையில் செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அடுத்த ரெய்னா:
இந்நிலையில் இதுவரை விளையாடியதில் சுரேஷ் ரெய்னா மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு இடையேயான 10 வியக்க வைக்கும் ஒற்றுமைகளை பற்றி பார்ப்போம்:
1. முதலில் உத்திரபிரதேசம் ஹைதராபாத் என வெவ்வேறு மாநிலங்களில் பிறந்திருந்தாலும் இருவருமே நவம்பர் மாதம் பிறந்துள்ளார்கள் என்பது முதல் ஒற்றுமையாகும்.

2. அதே போல சுரேஷ் ரெய்னா – திலக் வர்மா ஆகிய இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்களாகவும் வலது கை ஆஃப் பிரேக் பவுலர்களாகவும் இருக்கின்றனர்.

- Advertisement -

3. கடந்த 2008 ஐபிஎல் தொடரில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டாலும் மும்பைக்கு எதிரான தன்னுடைய 2வது போட்டியில் முதல் முறையாக அரை சதமடித்தார் (53 ரன்கள்). அதே போல கடந்த 2022 சீசனில் முதல் முறையாக அறிமுகமான திலக் வர்மா முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டாலும் ராஜஸ்தானுக்கு எதிரான தன்னுடைய 2வது போட்டியில் முதல் முறையாக அரை சதமடித்தார் (61 ரன்கள்).

3. 2014 சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் 227 ரன்களை சேசிங் செய்த போது 300க்கும் மேற்பட்ட முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் சுரேஷ் ரெய்னா 87 (25) ரன்கள் அடித்து நொறுக்கியும் சென்னை தோல்வியை சந்தித்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல 2023 சீசனில் குஜராத்துக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் 234 ரன்களை சேசிங் செய்த போது திலக் வர்மா 300க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 43 (14) ரன்களை சரவெடியாக எடுத்தும் மும்பை தோற்றது.

- Advertisement -

4. சுரேஷ் ரெய்னா கடந்த 2006இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 வயதில் அறிமுகமாகி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 2 கேட்ச்களை பிடித்தார். திலக் வர்மா இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 20 வயதில் அறிமுகமாகி தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 2 கேட்ச்களை பிடித்தார்.

5. சுரேஷ் ரெய்னா தன்னுடைய முதல் டி20 அரை சதத்தை 2009இல் நியூசிலாந்துக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச் நகரில் அடித்தார். ஆனால் அந்த இலக்கை எதிரணி 18.5 ஓவரில் சேசிங் செய்ததால் இந்தியா தோற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் 2வது போட்டியில் தன்னுடைய முதல் அரை சதத்தை திலக் வர்மா (51 ரன்கள்) பதிவு செய்தார். ஆச்சரியப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அந்த இலக்கை 18.5 ஓவரில் சேசிங் செய்ததால் இந்தியா தோற்றது.

- Advertisement -

6. 2016 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னியில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் சேசிங் செய்த இந்தியாவுக்கு ரெய்னா அரை சதத்தை அடிக்க முடியாமல் போனாலும் 49* ரன்கள் எடுத்து இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதே போல இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3வது போட்டியில் அரை சதத்தை அடிக்க முடியாமல் போனாலும் 49* ரன்கள் எடுத்த திலக் வர்மா இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

இதையும் படிங்க:குழந்தையா இருந்த எனக்கு டி20 கிரிக்கெட்டை கத்துக் கொடுத்ததை அவர் தான் – சிஎஸ்கே வீரர் பதிரனா நெகிழ்ச்சி பேட்டி

7. அது போக ரெய்னா – திலக் வர்மா ஆகிய இருவருமே தங்களுடைய டி20 கேரியரில் வீசிய முதல் ஓவரிலேயே இடது பேட்ஸ்மேனை தங்களின் முதல் விக்கெட்டாக எடுத்தனர். ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் தங்களுடைய முதல் விக்கெட்டை எடுத்த போட்டியிலும் இந்தியா தோற்றது.

- Advertisement -