யுவ்ராஜ் முதல் ருதுராஜ் வரை – உலகில் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய 6 வீரர்களின் பட்டியல் (வீடியோ உள்ளே)

yuvraj
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டும் பெரும்பாலான தருணங்களில் சரிசமமாக போட்டி போடுவது வழக்கமாகு. இருப்பினும் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு சதமடித்து தங்களது அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பேட்ஸ்மேன்கள் களமிறங்குவார்கள். அந்த எண்ணத்துடன் களமிறங்கி நன்கு செட்டிலாகும் பேட்ஸ்மேன்கள் ஒரு கட்டத்திற்கு பின் சரவெடியாக பேட்டிங் செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிரடியாக ரன்களை சேர்ப்பார்கள். அதன் உச்சகட்டமாக ஒரு ஓவரில் வீசப்படும் 6 பந்துகளிலும் கருணை காட்டாமல் சுமாராக பந்து வீசும் பவுலர் காலத்திற்கும் மறக்க முடியாத அளவுக்கு 6 சிக்ஸர்களை பறக்க விட்டு சரித்திரம் படைப்பார்கள்.

இருப்பினும் ஒரு சில சிக்சர்களை கொடுத்ததுமே சுதாரிக்கும் பவுலர்கள் எப்படியாவது தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள் என்பதுடன் 6 பந்துகளையும் எட்ஜ் வாங்காமல் மைதானத்திற்கு வெளியே அடிப்பது கடினம் என்பதால் ஒரே ஓவரில் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர்களை அடிப்பது மிகவும் சவாலானதாகும். அதனாலயே கிரிக்கெட்டில் அரிய நிகழ்வாக பார்க்கப்படும் அதை சர்வதேச மற்றும் முதல் தர அளவில் செய்த 6 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. சர் கேர்பீல்ட் சோபர்ஸ்: வெஸ்ட் இன்னிசை சேர்ந்த இவர் வரலாறு கண்ட மிகச்சிறந்த ஆல் ரவுண்டர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் கடந்த 1968ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கவுண்ட்டி சாம்பியன்ஷி தொடரில் நாட்டிங்கம்ஷைர் அணியின் கேப்டனாக கிளாமோர்கன் அணிக்கு எதிராக மால்கம் நாஷ் வீசிய ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்தார்.

குறிப்பாக 5வது பந்தை ரோஜார் டேவிஸ் கேட்ச் பிடித்தும் பேலன்ஸ் செய்ய முடியாமல் பவுண்டரியில் விழுந்ததால் உலகிலேயே முதல் தர கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த முதல் வீரராக அவர் வரலாறு படைத்தார்.

- Advertisement -

2. ரவி சாஸ்திரி: இந்தியாவின் நட்சத்திர முன்னாள் ஆல் ரவுண்டர் மற்றும் தற்போதைய வருணனையாளரான இவர் கடந்த 1985ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்கு எதிராக திலக் ராஜ் எனும் ஸ்பின்னர் வீசிய ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.

அதனால் வெறும் 123 பந்துகளில் இரட்டை சதமடித்த அவர் முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த பேட்ஸ்மேன் என்ற அந்த காலத்து உலக சாதனையும் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார்.

- Advertisement -

3. ஹெர்சல் கிப்ஸ்: கடந்த 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டேன் வன் புங்கே எனும் பவுலர் வீசிய 30வது ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்க விட்ட இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் உலக கோப்பையிலும் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் 44 பந்துகளில் 72 ரன்களை விளாசிய அவர் தென்னாப்பிரிக்காவின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார்.

4. யுவராஜ் சிங்: அதே 2007இல் தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வம்பிழுத்த ஆண்ட்ரூ பிளின்டாஃப்புக்கு பலிகாடாக சிக்கிய ஸ்டோர்டு ப்ராட் வீசிய ஒரே ஓவரில் நாலாபுறங்களிலும் 6 சிக்சர்களை பறக்க விட்ட யுவராஜ் சிங் தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் டி20 உலக கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேனாக இரட்டை உலக சாதனை படைத்த அவர் 12 பந்துகளில் அரை சதம் கடந்து அதிவேகமாக அரை சதமடித்த பேட்ஸ்மேனாக மற்றுமொரு உலக சாதனை படைத்ததை மறக்கவே முடியாது.

5. கிரண் பொல்லார்ட்: கடந்த 2021இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் இலங்கை நிர்ணயித்த 132 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அகிலா தனஞ்செயா ஹாட்ரிக் எடுத்ததால் 62/4 என திணறியது.

ஆனால் இவரா ஹாட்ரிக் எடுத்தார் என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு அதே போட்டியில் அதே பவுலர் வீசிய மற்றொரு ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்க விட்ட பொல்லார்ட் சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரராக சாதனை படைத்து வெற்றியும் பெற வைத்தார்.

6. ருதுராஜ் கைக்வாட்: இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையில் உத்திரபிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 220* ரன்களை குவித்து வெளுத்து வாங்கிய இவர் சிவா சிங் எனும் ஸ்பின்னர் வீசிய 49ஆவது ஓவரில் நோபால் உட்பட 7 சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அதனால் உலகிலேயே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார்.

Advertisement