அதுல விளையாட சான்ஸ் கிடைச்சா நல்லாருக்கும்.. இந்திய தொடர் பற்றி பேசிய பாக் வீரர்

Hasan Ali
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெறுகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் படிப்படியாக பல பரிணாமங்களை கடந்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.

மேலும் கடந்த 15 வருடங்களில் எண்ணற்ற திரில்லர் போட்டிகளை விருந்து படைத்த ஐபிஎல் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளுக்கு நிகராக தரத்திலும் நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இத்தொடரை நடத்துவதால் ஐசிசியையே மிஞ்சி சர்வதேச அரங்கில் மிகவும் பணக்கார வாரியமாக பிசிசிஐ விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது என்றால் மிகையாகது.

- Advertisement -

ஐபிஎல் கனவு:
அதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் ஏராளமான வீரர்கள் தங்களுடைய பொருளாதாரத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கே சவாலை கொடுக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி இங்குள்ள சூழ்நிலைகளை அறிந்து சர்வதேச கிரிக்கெட்டில் அசத்துகிறார்கள்.

அந்த வகையில் உலக கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த தொடராக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் மட்டும் விளையாட முடியாமல் தவித்து வருகிறார்கள். சொல்லப்போனால் இந்திய சூழ்நிலைகளை பற்றி தற்போதைய அணியில் இருக்கும் பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஐபிஎல் விளையாடாததால் நன்றாக தெரியாமல் களமிறங்கியது 2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு மறைமுக காரணமானது.

- Advertisement -

சொல்லப்போனால் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது சோயப் அக்தர், ஷாஹித் அஃப்ரிடி, சல்மான் பட், சோஹைல் தன்விர், கம்ரான் அக்மல் போன்ற நிறைய நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றனர். ஆனால் 2009க்குப்பின் பின் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி மோதும் 3வது டி20 நடைபெறும் கௌகாத்தி மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

எனவே தமக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வீரர்களும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவார்கள். நானும் அங்கே விளையாட விரும்புகிறேன். ஏனெனில் அது இந்த உலகிலேயே விளையாடப்படும் மிகப்பெரிய லீக் தொடர்களில் ஒன்றாகும். எனவே வருங்காலங்களில் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் விளையாடுவேன்” என்று கூறினார்.

Advertisement