லியாம் லிவிங்ஸ்டனுக்கு நேர்ந்த சோகம்.. டி20 உ.கோ தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – விவரம் இதோ

Liam Livingston
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த பத்தாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

லியாம் லிவிங்ஸ்டனுக்கு நேர்ந்த சோகம் :

ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டு வித்திட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது டி20 உலக கோப்பை அணியை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணி இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெளியான அறிவிப்பில் டி20 உலக கோப்பை தொடருக்கான கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான லியாம் லிவிங்ஸ்டனுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏனெனில் ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போது அந்த அணியில் இடம் பெற்றிருந்த அவர் கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடியான பேட்ஸ்மேனாக இருப்பது மட்டுமின்றி பகுதிநேர பந்துவீச்சாளராகவும் முக்கிய இடம் பிடித்து வந்தார்.

- Advertisement -

ஆனால் சமீப கலமாகவே அவர் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தடுமாறி வருவதால் அவர் இந்த உலக கோப்பை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் முதல் முறையாக டி20 உலககோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு ஒரு சில இளம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை தான் இந்த 2 பேருக்கும் கடைசி டி20 உலககோப்பை – விவரம் இதோ

மேலும் சமீபத்தில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இருந்து விலகிய ஜோப்ரா ஆர்ச்சர் உலககோப்பை அணியில் முன்னேற்பாடுடன் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்னர் அவர் முழுவதுமாக உடற்தகுதியை எட்டிவிட்டால் அவரும் இந்த தொடரில் விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement