2026 டி20 உலககோப்பை தான் இந்த 2 பேருக்கும் கடைசி டி20 உலககோப்பை – விவரம் இதோ

IND
- Advertisement -

கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அதன்பின்னர் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான புதிய இளம் வீரர்களை கொண்ட அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து வருகிறது.

இவங்க 2 பேருக்கும் இதுதான் கடைசி உலககோப்பை தொடர் :

இதன் காரணமாக 2026-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க இருக்கிறது. ஏற்கனவே பலமாக இருக்கும் இந்திய அணி இம்முறையும் கோப்பையை பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகும் இருந்து வருகிறது. எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

நிச்சயம் இந்த அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த 2026 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருக்குமே இதுதான் கடைசி டி20 உலக கோப்பை தொடர் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏனெனில் தற்போது 35 வயதாகும் சூரியகுமார் யாதவ் அடுத்த ஆண்டு 36 வயதினை எட்டிவிடுவார். எனவே 2028 டி20 உலகக் கோப்பை தொடர் வரும்போது அவருக்கு 38 வயதாகிவிடும் என்பதனால் வயதை கணக்கில் கொண்டு நிச்சயம் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதோடு இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் அவர் கேப்டன்சி பதவியும் பறிபோகலாம் என்பதனால் நிச்சயம் அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை. அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 2026 டி20 உலக கோப்பை தொடரின் போது 36 வயதில் விளையாடுவார். எனவே அவருக்கும் அடுத்த உலககோப்பைக்கு முன்னர் 37 வயதாகிவிடும்.

இதையும் படிங்க : 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. பவுமா தலைமையில் 2025ஆம் ஆண்டின் கனவு டெஸ்ட் அணியை வெளியிட்ட ஆஸி

இதன் காரணமாக தேர்வுக்குழுவினர் அவர் மீது கவனத்தை செலுத்தாமல் இனம் பந்துவீச்சாளர்கள் பக்கம் செல்லலாம். இப்படி வயதை காரணம் காட்டி இவர்கள் இருவருமே அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாமல் போகலாம். எனவே தான் இந்த டி20 உலக கோப்பை தொடரானது சூரியகுமார் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு கடைசி உலக கோப்பை தொடர் என்று கூறப்படுகிறது.

Advertisement