4 இந்திய வீரர்களுக்கு இடம்.. பவுமா தலைமையில் 2025ஆம் ஆண்டின் கனவு டெஸ்ட் அணியை வெளியிட்ட ஆஸி

Australia Dream Test team
- Advertisement -

உலகம் முழுவதிலும் 2026 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் 2025ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா வாரியம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இந்தியாவை சேர்ந்த கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2025இல் 10 போட்டிகளில் 813 ரன்களை 45.16 சராசரியில் குவித்த அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்ய உதவினார். அவருடன் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தேர்வாகியுள்ளார். 11 போட்டிகளில் 817 ரன்களை 40.85 சராசரியில் குவித்த அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவில் வெற்றிகளில் பங்கேற்றினார்.

- Advertisement -

2025ஆம் ஆண்டின் சிறந்த:

3வது இடத்தில் 10 போட்டிகளில் 805 ரன்களை 50.31 சராசரியில் குவித்த இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் இடம் பிடித்துள்ளார். 4வது இடத்தில் இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக தேர்வாகியுள்ள சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். இந்த வருடம் 9 போட்டிகளில் 983 ரன்களை 70.21 சராசரியில் குவித்துள்ள அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் விளாசி தொடரை சமன் செய்ய உதவினார்.

5வது இடத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற தென்னாபிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமா தேர்வாகியுள்ளார். 4 போட்டிகளில் 310 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும் ஐசிசி கோப்பையை வென்றதால் அவரை ஆஸ்திரேலியா வாரியம் தங்களுடைய கனவு கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. 6வது இடத்தில் 11 போட்டிகளில் 767 ரன்களை 47.93 சராசரியில் குவித்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கனவு டெஸ்ட் அணி:

44 கேட்ச்கள், 5 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ள அவர் விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார். 7வது இடத்தில் 9 போட்டிகளில் 496 ரன்கள், 33 விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக்ஸ் ஆல்ரவுண்டராக தேர்வாகியுள்ளார். 8, 9, 10வது இடங்களில் முறையே 55, 31, 32 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை சேர்ந்த மிட்சேல் ஸ்டார்க், ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்காட் போலண்ட் தேர்வாகியுள்ளார்கள்.

இதையும் படிங்க: என்னங்க பித்தலாட்டம் இது.. இந்தியா அழிப்பதாக சொன்ன பிபிசி, ஸ்டோக்ஸ் ஜெய்ச்சதும் புகழ்றாங்க.. ஆகாஷ் சோப்ரா

11வது வீரராக 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவில் 25 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா தொடரை வெல்ல உதவிய ஸ்பின்னர் சைமன் ஹார்மர் தேர்வாகியுள்ளார். 12வது வீரராக 764 ரன்கள், 25 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா 2025 கனவு டெஸ்ட் அணி: கேஎல் ராகுல், டிராவிஸ் ஹெட், ஜோ ரூட், சுப்மன் கில், தெம்பா பவுமா (கேப்டன்), அலெக்ஸ் கேரி (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்காட் போலண்ட், சைமன் ஹார்மர், ரவீந்திர ஜடேஜா

Advertisement