இவ்வளவு சாதனை படைத்த இவரை அவங்க தேர்வு செய்யல என்பது ஷாக்காக இருக்கிறது – லட்சுமணன் அதிர்ச்சி

Laxman-1
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் கிரிக்கெட் போட்டியினை உன்னிப்பாக கவனிக்கும் விஸ்டன் நாளிதழ் அந்தாண்டு முழுவதும் தனித்தனியே வீரர்களின் செயல்பாட்டை கவனித்து வரும். அதனடிப்படையில் கிரிக்கெட் வீரர்களுக்கான பைபிள் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் ஆண்டுதோறும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்து கௌரவிக்கும்.
அந்தவகையில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய வீரராக இங்கிலாந்தை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை டிரா செய்வதற்கும் இங்கிலாந்து அணி 50 ஓவர் உலக கோப்பை தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

Stokes-1

- Advertisement -

ஐந்து பேர் கொண்ட இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் மகளிர் வீராங்கனைகள் சஎல்ஸி பெர்ரி,இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மற்றும் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷானே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டில் சர்வதேச தொடர்களில் பல சாதனைகள் புரிந்த ரோஹித் சர்மாவின் பெயர் இதில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விவிஎஸ் லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கும். ஆஷஷ் தொடர் மிகப் பெரியது தான் ஆனால். அதைவிட உலக கோப்பை தொடர் மிகவும் முக்கியமானது.

rohith

மேலும் இது குறித்து பேசுகையில் : உலக கோப்பையில் 5 சதங்கள் அடிப்பது மிகச் சாதாரண விஷயமல்ல. அது தவிர உலக கோப்பை தொடரில் வேறு யாரும் இத்தனை ரன்களை எடுக்கவில்லை. மேலும், தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் அடித்த சதம் மிகவும் அசாத்தியமானது.

- Advertisement -

அப்படி ஒரு வீரரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று பதிவு செய்துள்ளார் விவிஎஸ் லட்சுமணன். இருப்பினும் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் அந்த அணியின் முக்கிய அங்கமாக மாறியுள்ளதால் அவரை விஸ்டன் நாளிதழ் சிறந்த வீரராக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

stokes

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சார்பில் 2005 ஆம் ஆன்ட்ரு பிளின்டாப் ஆண்டு இந்த விருதை பெற்று இருந்தார். அதன் பின்னர் 15 ஆண்டுகள் கழித்து இந்த விருதை பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் பிளிண்டாப்க்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு சிறப்பான ஆல்ரவுண்டராக இவர் தற்போது உருவெடுத்துள்ளார்.

Advertisement