எந்த பிரஷரும் எடுத்துக்க வேணாம். கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மனன் – விவரம் இதோ

Laxman
- Advertisement -

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர் கொள்ளவிருக்கிறது இந்திய அணி. இதுவரை ஐசிசி நடத்திய தொடர்களில் ஒரு முறைகூட கோப்பையை கைப்பற்றாத இந்திய அணியின் கேப்டனான விராட் கோஹ்லிக்கு இந்த இறுதிப் போட்டி ஒரு மிகச் சிறந்த வாய்ப்பக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று அவர் ஐசிசி கோப்பையை கைப்பற்றுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வரும் இந்நிலையில், மற்ற அனைத்து டெஸ்ட் போட்டிகளைப் போலதான் இந்த இறுதிப் போட்டியும் என்று நினைத்துக் கொண்டு விராட் கோஹ்லி விளையாட வேண்டும் என்று தனது ஆலோசனையை கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லஷ்மன். இதுகுறித்து பேசியிருக்கும் அவர்,

INDvsNZ

- Advertisement -

இந்த இறுதிப் போட்டி ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், அதனை மனதில் நினைத்துக் கொண்டு விராட் கோஹ்லி தன்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள கூடாது. மற்ற டெஸ்ட் போட்டிகளில் எப்படி எந்த அழுத்தமும் இல்லாமல் அவர் விளையாடுகிறாரோ அதேபோல தான் இந்த இறுதிப் போட்டியிலும் அவர் விளையாட வேண்டும். இதனை அவர் சரியாக செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஏற்கனவே நிரூபித்து விட்டார். ஒரு கேப்டனாக ஐசிசி கோப்பையை கைப்பற்ற அவருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.

இதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று கூறிய லஷ்மன், விராட் கோஹ்லியின் பேட்டிங் திறமை இந்த இறுதிப் போட்டிக்கு எந்த அளவிற்கு முக்கியமானது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,விராட் கோஹ்லி எப்போதுமே தனது பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு விளையாடக்கூடியவர். அவர் களத்தில் செட்டிலாகிவிட்டார் என்றால் இந்திய அணிக்கு ரன்கள் வருவது எளிதாக இருக்கும்.

இதை நாம் இதற்கு முன்பே பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். எனவே இந்த இறுதிப் போட்டியிலும் அவரின் நிலையான பேட்டிங் தன்மை இந்திய அணிக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது என்று அவர் கருத்து கூறியுள்ளார்.

kohli

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வருகிற 18ஆம் தேதி இங்லாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த இரண்டாம் தேதி இங்கிலந்திற்கு புறப்பட்டு சென்ற இந்திய வீரர்கள், தற்போது தங்களுக்குள்ளாகவே இரு அணிகளாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

Advertisement