- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சீக்கிரம் நல்லா விளையாட ஸ்டார்ட் பண்ணுங்க. இல்லனா உங்க ப்ளேஸ்க்கு 2 பேர் வெயிட்டிங் – லஷ்மனண் எச்சரிக்கை

ஆஸ்திரேலியா தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி எல்லோரையும் ரசிக்க வைத்தார் இளம் வீரர் சுப்மன் கில். ஆறு இன்னிங்ஸில் ஆடிய சுப்மன் கில் இரண்டு அரை சதங்களுடன் மொத்தமாக 51.80 என்கிற அபார ரன்ரேட் ஆவரேஜ் விகிதத்தில் 259 ரன்களை குவித்தார். சிறப்பாக ஆடிய கில்லுக்கு மற்றொரு வாய்ப்பாக தற்போது தடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடிய கில் இங்கும் அந்த ஃபார்மை தொடருவார் என்று எதிர்பார்த்தால் நம்மை ஏமாற்றியுள்ளார். நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே அவருக்கு வாய்பபளிக்கப்பட்டது. ஆறு இன்னிங்ஸல் ஆடிய அவர் 29,50,0,14,11,15 என மோசமாகி ஆடி வந்தார்.
சரி நான்காவது டெஸ்டில் நன்றாக ஆடுவார் என்று பார்த்தால் நேற்று டக்-அவுட் ஆகி மறுபடியும் அதிர்ச்சி தந்துள்ளார்.

- Advertisement -

மொத்தமாக ஏழு இன்னிங்சிலும் சேர்த்தே 19.83 ரன்ரேட் ஆவரேஜ் விகிதத்தில் 119 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இந்நிலையில் சுப்மன் கில் குறித்து இந்திய முன்னாள் விவிஎஸ் லக்‌ஷ்மண்
கருத்து தெரிவித்துள்ளார்.இதுவரை நடந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் பவுலிங்கிற்கு சாதகமானது எனவே அவரை குறை கூறவிட முடியாது.

ஆனால் நான்காம் டெஸ்டான நேற்று அவர் ஆடிய பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது.அதில் அவர் சொதப்பியது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மேலும் கில்லுக்கு சிறிது டெக்னிக்கல் பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்டார். அவர் வலது காலை மிக வேகமாக முன்னெடுத்து வைப்பதால் ஸ்கோர் செய்ய தவறுகிறார் இதை அவர் விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் வெளியே கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஏற்கெனவே வாய்ப்பு எப்போது வரும் வெயிட் செய்து வருகின்றனர். கில் மென்மேலும் சொதப்பினால் வாய்ப்பு அவர்களுக்கு போய்விடும் என்று மறைமுக தொனியில் கில்லுக்கு அறிவுரை வழங்கினார்.

- Advertisement -
Published by