இலங்கை அணிக்கெதிரான பிளேயிங் லெவனை தேர்வு செய்த லக்ஷ்மணன் – ஜெயிக்க இந்த டீம் போதும்

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது ஜூலை 13ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக அங்கு சென்றுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட ஒரு புதிய அணி தற்போது இலங்கை சென்றுள்ளது.

dravid

- Advertisement -

இந்த புதிய அணியின் கேப்டனாக தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் செயல்பட இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதில் எத்தனை பேர் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்றும் அவர்களது திறமை எவ்வாறு இருக்கப் போகிறது என்றும் பலரும் அதனை பார்க்க ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடர் துவங்க சில நாட்களே உள்ள நிலையில் இந்த இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனை வி.வி எஸ் லட்சுமணன் தேர்வு செய்து அறிவித்துள்ளார். அந்த அணியில் துவக்க வீரராக தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்த லட்சுமணன் மூன்றாவது இடத்தில் சூரிய குமார் யாதவை தேர்வு செய்துள்ளார். நான்காவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக சாம்சனையும், ஐந்தாவது இடத்தில் மனிஷ் பாண்டேவையும் தேர்வு செய்துள்ளார்.

Samson 1

மேலும் ஆல்ரவுண்டர் வரிசையில் ஹார்டிக் பாண்டியா மற்றும் க்ருனால் ஆகியோரை தேர்வு செய்த லட்சுமணன் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹரை தேர்வு செய்துள்ளார். அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களாக சாகல் மற்றும் குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளார். இவர் தேர்வு செய்த இந்திய அணி நிச்சயம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் என்று கூறப்படுகிறது. லட்சுமணன் தேர்வு செய்த பிளேயிங் லெவன் இதோ

Pandey 1

1) ஷிகர் தவான், 2) ப்ரித்வி ஷா, 3) சூர்யகுமார் யாதவ், 4) சஞ்சு சாம்சன், 5) மணிஷ் பாண்டே, 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாஹர், 10) குல்தீப் யாதவ், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement