CSK vs MI : இறுதி பந்தில் மும்பை அணி வெற்றிபெற்ற இறுதி போட்டியின் கடைசி ஓவர் – வீடியோ

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

MI
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Bumrah-1

நேற்றைய ஆட்டத்தின் பரபரப்பான இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 6 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட வாட்சன் ஒரு ரன் அடித்தார் பிறகு ஜடேஜா ஒரு ரன் அடிக்க மீண்டும் வாட்சன் இரண்டு ரன் அடித்தார். அடுத்த பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. யார் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகிறார்கள் என்று நினைத்தபோது கடைசி 2 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் , சென்னை அணியால் 3 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. இதனால் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதோ அந்த பரபரப்பான கடைசி ஓவர் வீடியோ :

- Advertisement -

ஒரு பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நேரத்தில் ஸ்லோ பால் போட்டு விக்கெட்டை எடுத்தார் மலிங்கா இதன்மூலம் ஐபிஎல் தொடரை நான்காவது முறையாக மும்பை அணி வெற்றி பெற்று இமாலய சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement