தோனி பேச்சை கேட்டா அவ்ளோ தான், இதை செஞ்சா பதிரனா என்னை விட பெஸ்ட்டா வருவாரு – மலிங்கா பேட்டி

- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றின் முடிவில் 17 புள்ளிகளை பெற்று 2வது அணியாக வரலாற்றில் 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியது. முன்னதாக கடந்த வருடம் தீபக் சஹார் காயமடைந்த நிலையில் ட்வயன் ப்ராவோவும் முக்கிய போட்டிகளில் காயத்தால் வெளியேறியது சென்னையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

Pathirana

- Advertisement -

இருப்பினும் கடைசி கட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்ற இலங்கையின் இளம் வீரர் மதிசா பதிரனா ஜாம்பவான் மலிங்காவை போலவே ஸ்லிங்கா ஆக்சனுடன் பந்து வீசி அனைவரது கவனத்தை ஈர்த்தார். அந்த நிலையில் இந்த வருடமும் தீபக் சஹருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 7.57 என்ற எக்கனாமியில் எடுத்து சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

மலிங்கா யோசனை:
அதிலும் குறிப்பாக டெத் ஓவர்களில் குறைந்த ரன்களை கொடுத்து யார்கர் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்த அவர் சென்னை அணிக்கும் மலிங்காவைப் போன்ற ஒரு பவுலர் கிடைத்து விட்டார் என்று அந்த அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு அசத்தி வருகிறார். மேலும் பொதுவாகவே யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டாத தோனி அவரை 2 – 3 தருணங்களில் வெளிப்படையாக பாராட்டினார். குறிப்பாக வித்தியாசமான ஆக்சனை கொண்டுள்ளதால் காயங்களை தவிர்த்து ஐசிசி உலகக் கோப்பை போன்ற தொடர்களில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டின் பக்கமே செல்லக்கூடாது என தோனி வெளிப்படையாக கேட்டுக்கொண்டார்.

Pathirana-and-Dhoni

அதனால் இலங்கையின் வருங்காலத்தை பிரகாசப்படுத்தும் வகையில் பதிரனா எனும் வைரத்தை தோனி பட்டை தீட்டி வருவதாக பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே பாராட்டியது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத மலிங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் தான் உண்மையான அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். எனவே வெறும் 20 வயது மட்டுமே நிரம்பிய அவர் தம்மைப் போலவே குறிப்பிட்ட சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் தம்மையே மிஞ்சும் அளவுக்கு அசத்துவார் என்று தெரிவிக்கும் மலிங்கா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எதோ ஒரு வழியில் இந்த பையனை நான் என்னை விட சிறந்தவராக மாற்ற விரும்புகிறேன். அதற்காக எப்படியாவது அடுத்த டெஸ்ட் தொடரில் அவரை இலங்கை அணியுடன் இணைத்து ஒருநாள் போட்டிகளிலும் சில வாய்ப்புகளை கொடுக்க வேண்டுமென நினைக்கிறேன். அந்த வகையில் அடுத்த சில வருடங்கள் அவர் விளையாடுவதை பார்த்து விட்டு எஞ்சியவற்றை வருங்காலத்தில் முடிவெடுக்கலாம். ஒருவேளை அடுத்த 3 வருடத்தில் 10 முதல் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது அவர் தன்னுடைய சொந்த செயல்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பதற்கு உதவும்”

Malinga

“எடுத்துக்காட்டாக பந்தை கீழே கொண்டு வரும் அதே சமயத்தில் ரிவர்ஸ் செய்யும் யுக்தியை நான் 2010இல் என்னுடைய கடைசி டெஸ்டில் தான் கற்றுக் கொண்டேன். அதாவது கால்லே மைதானத்தில் இருக்கும் கோட்டை பகுதியில் இருந்து தான் பொதுவாக இலங்கை அணியினர் என்னை வந்து வீச அழைப்பார்கள். ஏனெனில் கோட்டை பகுதிகளில் இருந்து வரும் காற்று பந்தை ரிவர்ஸ் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக கற்று 6 வருடங்கள் கழித்து தான் நான் அந்த மைதானத்தில் பெவிலியன் திசையிலிருந்து பந்து வீசினேன்”

இதையும் படிங்க:GT vs CSK : நல்ல தொடக்கத்தை பெற்றும் சொதப்பிய சிஎஸ்கே – குஜராத் மாஸ் பவுலிங், ஃபைனல் உறுதியா?

“எனவே இது போன்ற முக்கியமான விவரங்களை பதிரனாவுக்கு யாரும் சொல்ல மாட்டார்கள். சொல்லப்போனால் இலங்கைக்கு விளையாடுவதற்கு முன்பாகவே வெறும் 20 வயதிலேயே நாங்கள் அவருக்கு அக்கறையுடன் பாதுகாப்பு கொடுத்தோம்” என்று கூறினார்.

Advertisement