ஃபிட்டா இருந்தா நிச்சயம் இவர் முதல் டெஸ்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாராம் – பயிற்சியாளர் அதிரடி

INDvsAUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்துவிட்டது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ள இந்த முதல் போட்டியில் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்ததால் இம்முறை இந்திய அணி பழிதீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணி விளையாடும் என்று தெரிகிறது.

INDvsAUS

- Advertisement -

மொத்தமாக பார்த்தால் இந்த தொடர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்றே கூறலாம் மேலும் இந்த தொடர் குறித்த பல்வேறு கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முதன்மை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இந்த தொடர் குறித்த தனது கருத்துக்களையும் இந்த முதல் போட்டியில் விளையாட இருக்கும் வீரர் குறித்த தனது தகவலை தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளை மறுநாள் தொடங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் ஆல்ரவுண்டர் கேமரோன் க்ரீன் இடம் பெறுவாரா ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் : அவர் ஒரு திறமைமிக்க இளம் வீரர் உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது திறமையான ஆட்டத்தை நாங்கள் கண்டுள்ளோம். அதனாலேயே அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

Green

பயிற்சி ஆட்டத்தில் அவரது தலையில் பந்து தாக்கிய சம்பவம் அசாதாரணமானது. நாங்கள் மூளை அதிர்ச்சி நெறிமுறைகளை கடந்து செல்கிறோம். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் நிச்சயமாக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட் இருக்கும் அவரது குடும்பத்திற்கும் உற்சாகமாக இருக்கும் என்று கூறினார்.

Bumrah-1

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் கிரீன் சதமடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கி அவர் தரையில் அமர்ந்தார். பிறகு சிறிது நேரத்திற்கு அவர் அதிர்ச்சியாக உணர்வு அடைந்ததாகக் கூறப்பட்டது. அந்த போட்டியில் இருந்து பாதியில் அவர் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement