பென் ஸ்டோக்ஸ் – ஹர்டிக் பாண்டியா இருவரில் யார் பெஸ்ட்? தெ.ஆ ஜாம்பவான் குளூஸ்னர் கருத்து இதோ

Ben Stokes Hardik Pandya
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே ஐசிசி உலக கோப்பை போன்ற தொடர்களில் கோப்பையை வெல்வதற்கு ஆல்-ரவுண்டர்களின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் ஆற்றிய பங்கை போல இந்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகினாலும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று இந்திய ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அசத்திய அவர் 2018 ஆசிய கோப்பையில் சந்தித்த காயத்தால் பேட்டிங்கில் தடுமாறி பந்து வீச முடியாமல் தவித்தார். அது துபாயில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் எதிரொலித்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன் பதவியில் அனைவரையும் அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையையும் வென்று தன்னை நிரூபித்தார்.

- Advertisement -

அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி, ஆஸ்திரேலியா என சமீபத்திய தொடர்களில் இந்தியா பதிவு செய்த வெற்றிகளில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் அதே பழைய பன்னீர்செல்வமாக பழைய பாண்டியாவாக அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது உலக கோப்பையில் இந்தியாவுக்கு பெரிய பலத்தை சேர்க்கிறது.

க்ளுஸ்னர் கருத்து:
அப்படி மீண்டும் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்படத் துவங்கியுள்ள பாண்டியாவை இங்கிலாந்தின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக போற்றப்படும் பென் ஸ்டோக்ஸ் உடன் ஒப்பிட்டு விவாதங்கள் நடக்கின்றன. அதில் 2019 உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களை வெல்வதற்கு காரணமாக அமைந்த அவருடன் பாண்டியாவை ஒப்பிடுவதில் எந்த நியாயமுமில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லத்தீப் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் என்னதான் கம்பேக் கொடுத்து அசத்தலாக செயல்பட்டாலும் பாண்டியாவை விட ஸ்டோக்ஸ் தான் முழுமையான ஆல் ரவுண்டர் என முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் லன்ஸ் க்ளூஸ்னர் பாராட்டியுள்ளார். 90களின் இறுதியில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்தி 1999 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்ற அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“அனேகமாக பாண்டியாவை விட ஸ்டோக்ஸ் சற்று முழுமையானவர் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அனைத்து நேரங்களிலும் நிறையவற்றை கற்றுக் கொண்டு வருகிறார். கடந்த 2 – 3 வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டியாவின் எழுச்சி அபாரமாக உள்ளது. இருப்பினும் அவர் இன்னும் முழுமையான பொருளாக மாறவில்லை. அதாவது எப்போது அவர் தன்னுடைய முழுமையான ஓவர்களை வீசுகிறாறோ அப்போது அவரை ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் இணைக்கலாம்”

- Advertisement -

“அந்த இடத்திற்கு அவர் வந்தாலும் இன்னும் டாப்புக்கு வரவில்லை. இங்கு பாண்டியாவின் பேட்டிங் பற்றி எந்த கேள்வியும் கிடையாது. கேள்விகள் அனைத்தும் அவருடைய பந்து வீச்சில் உள்ளது. அவரால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கு ஒதுக்கப்படும் முழுமையான ஓவர்களை தொடர்ந்து பந்துவீச முடியுமா? அவருடைய பேட்டிங் உலகத்தரம் வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை” என்று கூறினார்.

அதாவது பேட்டிங்கில் அசத்தும் பாண்டியா பந்து வீச்சில் முழுமையாக செயல்பட முடியாத காரணத்தால் அவரை ஸ்டோக்ஸ் போன்ற முழுமையான ஆல்-ரவுண்டருடன் ஒப்பிட முடியாது என்று க்ளூஸ்னர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல 2018இல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முழுமையாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா அதன்பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த போதிலும் முழுமையாக பந்து வீச முடியாமல் தவிக்கிறார்.

இதையும் படிங்க : எல்லாம் அவர் கையில் இருக்கு, அவர்மட்டும் அசத்தினால் டி20 உ.கோ இந்தியாவுக்கு தான் – ப்ராட் ஹோக் ஓப்பன்டாக்

அதனாலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிவிக்காமலேயே கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுள்ள அவர் டி20 கிரிக்கெட்டிலும் இதர பந்து வீச்சாளர்கள் தடுமாறும் போது மட்டுமே தேவையான சமயத்தில் பந்து வீசுகிறார். மறுபுறம் பேட்டிங்கில் சிறந்த பினிஷர் என்று போற்றும் அளவுக்கு அசத்தினாலும் ஆல்-ரவுண்டர் என்றால் முழுமையாக பந்து வீசி அதிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அர்த்தமாகும்.

Advertisement