எல்லாம் அவர் கையில் இருக்கு, அவர்மட்டும் அசத்தினால் டி20 உ.கோ இந்தியாவுக்கு தான் – ப்ராட் ஹோக் ஓப்பன்டாக்

Hogg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலக கோப்பை துவங்குவதற்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதி கட்டமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் கடந்த 2007க்குப்பின் 2வது கோப்பையை தொட முடியாமல் தவித்து வரும் இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்குகிறது. இருப்பினும் நம்பிக்கை நட்சத்திர சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறிய நிலையில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Suryakumar-Yadav

- Advertisement -

இதனால் கடந்த வருடம் துபாயில் நடந்த உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியதை போன்ற நிலைமை மீண்டும் வந்து விடுமோ என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பார்முக்கு திரும்பிய விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பஞ்சமில்லாமல் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா முழு மூச்சுடன் கோப்பையை வெல்வதற்கு போராட தயாராகியுள்ளது. மேலும் பேட்டிங் வரிசையில் ரோகித், ராகுல் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும் சூர்யகுமார் யாதவ் உச்சகட்ட பார்மில் இருப்பது மிகப்பெரிய பலத்தை சேர்க்கிறது.

சூர்யாவின் ஆட்டம்:
இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்த அவருக்கு 30 வயதில் தான் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதை கொஞ்சமும் வீணடிக்காத வகையில் பயன்படுத்தும் அவர் பெரும்பாலான போட்டிகளில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் அதிரடியை துவக்கி ரன்களைக் குவித்து வெற்றிகளை பெற்று கொடுத்து வருகிறார்.

Suryakumar Yadav 1

குறிப்பாக இந்தியாவின் ஏபிடி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு மைதானத்தின் நாலா புறங்களிலும் சுழன்றடிக்கும் திறமை பெற்றுள்ள அவர் அறிமுகமானது முதல் இதர இந்திய வீரர்களைக் காட்டிலும் அதிக பட்சமாக 6 ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார். அதனாலேயே குறுகிய காலத்தில் உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள அவர் 2022ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக அளவில் அதிக ரன்கள் (739*) மற்றும் சிக்ஸர்களை (45*) அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து வருகிறார்.

- Advertisement -

அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவருடைய ஆட்டம் தான் இந்தியாவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் ப்ராட் ஹாக் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை இந்த வருடம் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லுமானால் அதற்கு சூரியகுமார் யாதவ் தான் காரணமாக இருப்பார். அவர்களது அணியில் மிகவும் முக்கிய வீரராக இருக்கும் அவர் புதிய ஷாட்டுகளை கண்டுபிடித்து படைப்பவராக உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே சதத்தை அடித்துள்ள அவர் சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த இன்னிங்சை விளையாடி போட்டியை வென்று கொடுத்தார்”

Hogg

“அதனால் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் 150 ரன்களை எடுக்கவேண்டிய இன்னிங்சில் அவர் நிச்சயமாக தன்னுடைய பேட்டிங்கால் 190 – 200 ரன்களை எளிதாக எடுத்துக் கொடுப்பார். ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 4 இடத்தில் அவர்தான் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு உள்ளார். அவருடைய சராசரியும் நன்றாகவே உள்ளது.

- Advertisement -

ஒருவேளை டாப் ஆர்டர் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்ததாக களமிறங்கி நிலைமையை சமாளித்து இந்தியாவை வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை அவரால் ஏற்படுத்த முடியும்” என்று கூறினார். அப்படி நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியது கிடையாது என்பது மட்டுமே அவருக்கு காத்திருக்கும் சவாலாகும்.

இதையும் படிங்க : INDvsRSA : தமிழக வீரர் வெளியேற்றப்பட வாய்ப்பு. நாளைய 2 ஆவது போட்டிக்கான பிளேயிங் லெவன் – லிஸ்ட் இதோ

இருப்பினும் கேரளாவின் திருவனந்தபுரம் முதல் இங்கிலாந்தின் நாட்டிங்கம் வரை சவாலான சூழ்நிலையில் இதர பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது கில்லியாக சொல்லி அடித்த அவர் முதல் முறையாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவிலும் அட்டகாசமாக செயல்பட்டு இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று நம்பலாம்.

Advertisement