INDvsRSA : தமிழக வீரர் வெளியேற்றப்பட வாய்ப்பு. நாளைய 2 ஆவது போட்டிக்கான பிளேயிங் லெவன் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி திருவனந்தபுரம் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Markram

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை அக்டோபர் 2-ஆம் தேதி கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் தென்னாப்பிரிக்க அணியும் களமிறங்க உள்ளதால் நாளைய போட்டி இரு அணிக்குமே முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நாளைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

Ravichandran Ashwin

அந்த வகையில் நாளைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் ஒரு மாற்றம் நிகழ்த்தப்படலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் கடந்த போட்டியில் விளையாடிய தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் நான்கு ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தலாக செயல்பட்டிருந்தாலும் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

கடந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் இந்த போட்டியில் அவர் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்திய அணியில் இருக்காது என்று தெரிகிறது. அதன்படி நாளைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கவாஸ்கரே ஆதரவு கொடுத்துருக்காரு, அஷ்வினை பின்பற்றுவேன் – டி20 உ.கோ’யில் இடம் பெறாத இளம்வீரர் பேச்சு

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) தீபக் சாகர், 10) அர்ஷ்தீப் சிங், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement