கவாஸ்கரே ஆதரவு கொடுத்துருக்காரு, அஷ்வினை பின்பற்றுவேன் – டி20 உ.கோ’யில் இடம் பெறாத இளம்வீரர் பேச்சு

Gavaskar
- Advertisement -

விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் போன்ற சில வீரர்களுக்கு திறமை இருந்தும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் கூட இடம் கிடைக்காது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதே சமயம் நிறைய முன்னாள் வீரர்கள் முதன்மை அணியில் தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்த முகமது சமி மற்றும் தீபக் சஹர் ஆகியோர் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதன்மை அணியில் விளையாடும் அளவுக்கு திறமை பெற்றிருந்தும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Ravi Bisnoi

- Advertisement -

சஞ்சு சாம்சன் போன்றவர் அந்த இடத்தை கூட பிடிக்க முடியாத நிலைமையில் கடந்த பிப்ரவரியில் அறிமுகமான இவர் இவ்வளவு குறுகிய காலத்திலேயே சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தாலேயே முதன்மை அணியை நெருங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2020இல் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளராக சாதனை படைத்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இவர் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த சீசன்களில் தலா 12 விக்கெட்டுகளை குறைவான எக்கனாமியில் எடுத்து அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.

கவாஸ்கரின் ஆதரவு:
அதனால் இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்று வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய அவருடைய மதிப்பும் கூடிய நிலையில் இந்த வருடம் லாக்னோ அணிக்காக 4 கோடிக்கு விளையாடினார். அதில் 14 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து அதன்பின் இந்தியாவுக்காக அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் வாய்ப்பை பெற்ற அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்களை 7.08 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார்.

bisnoi

குறிப்பாக ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை அவுட்டாக்கியதை போன்ற நல்ல திறமை கொண்டுள்ள ரவி பிஷ்னோய் இந்த உலக கோப்பையில் தேர்வாகவிட்டாலும் இளமையாக இருப்பதால் வருங்காலங்களில் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டும் ஆதரவும் தெரிவித்திருந்தார். மேலும் மனம் தளராமல் அடுத்த முறை தேர்வுக்குழு புறக்கணிக்க முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் சமீபத்தில் கவாஸ்கர் ஆதரவு கொடுத்திருந்தார்.

- Advertisement -

அதற்கு நன்றி தெரிவிக்கும் ரவி பிஷ்னோய் அஷ்வின், சஹால் போன்ற அனுபவமான சிறந்த ஸ்பின்னர்கள் ஏற்கனவே இருப்பதால் தமக்கான நேரம் வரும் வரை மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக நம்பிக்கையுடன் பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுனில் கவாஸ்கர் எனக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு சிறப்பம்சத்தை அவர் என்னிடம் பார்த்திருக்கக்கூடும். மேலும் அவரைப் போன்ற மிகச்சிறந்த ஜாம்பவானிடமிருந்து உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்காத எனக்கு ஆதரவு கிடைத்தது மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. அது நிறைய அர்த்தத்தை ஏற்படுத்துகிறது”

Gavaskar

“மேலும் உலகக்கோப்பையில் ஏற்கனவே 2 மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் அஷ்வின் மற்றும் சஹால் ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வித்யாசமான திறமைகளை கொண்டுள்ளனர். சஹாலிடம் நான் நிறைய பேசியுள்ளேன். அவர் இந்தியாவுக்கு முன்பாக இங்கேயே நீங்கள் நிறைய முன்னேற வேண்டுமென்று ஐபிஎல் தொடரின் போது கூறினார். அவரைவிட அஷ்வின் வித்தியாசமான கிளாஸ் நிறைந்தவர்.

- Advertisement -

அவரிடம் சிறந்த கிரிக்கெட் மூளை இருப்பதால் தொடர்ந்து முன்னேறுவதற்கு எதையாவது சோதித்துக் கொண்டே இருக்கிறார். அவரைப் பார்க்கும் போது எப்படி இவரால் மட்டும் இவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் கற்றுக் கொள்ள முடிகிறது என்று நினைப்பேன். அந்த வகையில் அவருடைய மூளையை நானும் பின்பற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் : இந்தியாவுக்கு சேன்ஸ் இருக்கு. ஆனா ஜெயிக்கபோறது அந்த டீம் தான் – ராஸ் டெய்லர் கணிப்பு

இப்போதும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் இடம் பிடித்து இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் இவருக்கு ஏற்கனவே ஜடேஜா காயத்தால் விலகியதாலும் முதன்மை சுழல் பந்து வீச்சாளரான சஹால் தடுமாறுவதும் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அதிர்ஷ்டமிருந்தால் உலகக் கோப்பையின் பாதியில் இவர் முதன்மை அணியில் சேர்க்கப்பட்டு 11 பேர் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement