அமித் மிஸ்ராவுக்கு பதிலாக டெல்லி அணியில் இடம்பிடித்த இளம் வீரர். அப்படி என்ன ஸ்பெஷல் இவரிடம் – விவரம் இதோ

Lalit
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. நேற்றைய போட்டியில் டெல்லி அணி இரு மாற்றங்களை செய்தது. ஹெட்மையர்க்கு பதிலாக ககிசோரபாடாவையும் அதேபோல அமித் மிஸ்ராவுக்கு பதிலாக இளம் வீரர்களை டெல்லி அணி களமிறக்கியது. சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இருக்கையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்தது.

lalit 1

- Advertisement -

அதற்கு பதிலளிக்கும் வகையில் சில விளக்கங்களை கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர். லலித் யாதவ் சென்ற ஆண்டு டெல்லி கேப்பிடல் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்க பட்டவர் ஆவார். சென்ற ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்த லலித் யாதவுக்கு இந்த ஆண்டு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலமாக இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும் லலித் யாதவ் இதுவரை விளையாடிய 35 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல பேட்டிங்கில் 560 ரன்களைக் குவித்திருக்கிறார். அமித் மிஸ்ரா வெறும் பவுலிங் மட்டும் தான் போடுவார். அவரால் மிகப்பெரிய அளவில் பேட்டிங் ஆட இயலாது. எனவே லலித் யாதவை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நன்றாக விளையாடுவார் என்கிற அடிப்படையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி அவரை அமித் மிஸ்ராவுக்கு பதிலாக தேர்ந்தெடுத்தது.

lalit 2

முதலில் பேட்டிங் அறிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் அடித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் லலித் யாதவ் 24 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். அதன் பின்னர் 148 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கொண்டு பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருந்தது.

morris

அதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக 43 பந்துகளில் 62 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இறுதியில் கிறிஸ் மோரிஸ் தனியாளாக நின்று
18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிபெற வைத்தார்.

Advertisement