இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக தோனியின் ஆஸ்தான பயிற்சியாளர் நியமனம் ஆக அதிக வாய்ப்பு – விவரம் இதோ

Rajput
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்றோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக டாம் மூடி, ராபின் சிங் ஆகியோர் விண்ணப்பித்த நிலையில் தற்போது 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியின் மேலாளராக இருந்த லால்சந்த் ராஜ்புட் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளார்.

Lalchand-Rajput

அவரது விண்ணப்பத்தை ஏற்று பிசிசிஐ அவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க ஆலோசனை செய்து வருகிறது. மேலும் தற்போது ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக பதவி வகித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவரை அனுபவத்தின் காரணமாக இந்திய அணியின் பயிற்சியாளராக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

Advertisement