கோலி கொஞ்சம் சப்போர்ட் பண்ணா இந்திய அணியின் பெரிய வீரராக மாற இவருக்கு வாய்ப்புள்ளது – லக்ஷ்மன் பேட்டி

Laxman
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஜூன் மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருப்பதால் 3-4 மாதங்கள் இங்கிலாந்தில் செலவிட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தற்போது இங்கிலாந்து செல்ல ஆயத்தமாக மும்பையில் பயோ பபுளில் இருக்கின்றனர்.

IND

- Advertisement -

ஜூன் இரண்டாம் தேதி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளும் இந்திய வீரர்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வரை இங்கிலாந்தில் செலவழிக்க உள்ளனர். இதனால் மிகப்பெரிய இந்திய அணி அங்கு செல்ல உள்ளது. 24 பேர் கொண்ட இந்திய அணி இந்த தொடர் முழுவதையும் எதிர்கொள்ள உள்ளதால் இந்த தொடரில் வீரர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியைச் சேர்ந்த முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மணனும் இந்த தொடரில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்திய அணியில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக மூன்று பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் 4-வது வீரராக சிராஜுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

siraj 2

இளம் வீரரான அவர் அடுத்து சில வருடங்கள் கடினமாக உழைத்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய பெயர் எடுக்க வாய்ப்புள்ளது. அதற்கான தகுதியும் திறமையும் அவரிடம் உள்ளது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பிடித்த அவர் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் இருந்து அவருக்கு ஒரு நம்பிக்கை கிடைத்துள்ளது. அந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

Siraj

ஐபிஎல் தொடரிலும் அவரது பந்துவீச்சு பாராட்டும் விதமாகவே இருந்தது. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் அவர் நிச்சயம் இந்திய அணியில் பெரிய வீரராக மாறுவார் என லக்ஷ்மன் கூறியது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து ஆடுகளம் முழுவதும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானம் என்பதனால் நிச்சயம் சிராஜுக்கு இந்த மைதானங்கள் ஒத்துழைக்கும் என்று லட்சுமணன் இந்த கருத்துக்களை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement