சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் இவரை களம் இறங்குங்கள்! புதிய வீரரை கைகாட்டும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்!

Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமிற்குள் பெரும் கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது. முதலில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தும் திடீரென அந்த அணியில் உள்ள 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதில் இரண்டு பந்து வீச்சாளர்களும் அடக்கம். இதனால் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

csk 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சிக்கும் செல்லவில்லை. அதனை தொடர்ந்து அடுத்த நாளே சுரேஷ் ரெய்னா திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இந்தியாவிற்கு செல்வதாக அறிவித்தார். இந்தியாவிற்கு அவர் சென்ற பின்னர் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு பல சர்ச்சைகள் கூறப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் கூட திடீரென்று ஏடாகூடமாக பேசினார்.

இந்நிலையில் ரெய்னா விற்கு மாற்று வீரரை தேடும் கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. பலரும் தோனியை அந்த மூன்றாம் இடத்தில் இறங்க அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் வித்தியாசமாக ஒரு வீரரை களமிறக்க கூறியுள்ளார். அவர் கூறுகையில்.

Lakshman sivaramakrishnan

சாம் குரன் மூன்றாவது இடத்தில் இறங்கலாம். அவர் திடீரென்று இறங்கி அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணிக்கு பயனுள்ள ரன்களை அடிக்கலாம். கடந்த பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம் தோனி இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை தான் எடுத்து வருகிறார். இவரும் அப்படித்தான் பந்தும் சரியாக வீசக்கூடிய வீரர். இவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினால் நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கையும் பலருக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

- Advertisement -