- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமே சஞ்சு சாம்சன் விடயத்தில் இந்திய அணி இந்த தவறை செய்யக்கூடாது – லட்சுமிபதி பாலாஜி வேண்டுகோள்

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் விளையாடிய இந்திய டி20 அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 5-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

சஞ்சு சாம்சன் விடயத்தில் இந்த தவறை செய்யாதீங்க : எல் பாலாஜி

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்திய இந்திய அணிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கிய வீரராக துவக்க வீரர் சஞ்சு சாம்சன் திகழ்ந்தார். இந்த போட்டியை பொறுத்தவரை 50 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் போட்டிகளிலும் அவரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏற்கனவே இந்திய அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக பார்ம் அவுட்டில் இருந்ததன் காரணமாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் தொடர் வாய்ப்பினை பெறாமல் இருந்தார்.

இவ்வேளையில் மீண்டும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் இனிவரும் ஆட்டங்களிலும் துவக்க வீரராக விளையாட இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியில் சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் மட்டும் களமிறக்க கூடாது என்றும் அவரை துவக்க வீரராகவே விளையாட வைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான லஷ்மிபதி பாலாஜி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் துருப்பு சீட்டே இவர்தான்.. அவரால் தான் இந்திய அணி வெற்றி பெறுகிறது – அபிஷேக் நாயர் புகழாரம்

ஆஸ்திரேலிய டி20 தொடரின் போது சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் அனுப்பப்பட்டார். ஆனால் அது அவருக்கு சரியானதாக இல்லை. சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் போட்டியிலும் சரி துவக்க வீரராக வந்தே சஞ்சு சாம்சன் மிக சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணி அவரை மிடில் ஆர்டருக்கு தள்ளும் ஒரு தவறை மட்டும் இனி செய்யவே கூடாது. எப்போதுமே அவர் தான் துவக்க வீரராக விளையாட வேண்டும் என லட்சுமிபதி பாலாஜி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -