நியூசி ரன் குவிப்பிற்கு டெய்லர் மட்டுமல்ல இவரும் முக்கிய காரணம். உண்மையிலே இவர் பவுலர் தானா ? – விவரம் இதோ

NZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

Taylor 2

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி இந்திய அணி முதலில் பந்து வீசும் என்று முடிவு செய்தார். மேலும் இந்திய அணியில் இரு மாற்றங்களாக வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமிக்கு பதிலாக சைனியும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாஹலும் அணியில் இணைந்துள்ளனர்.

அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் குப்தில் 79 ரன்களும், டெய்லர் 73 ரன்களும் அடித்தனர். பின்னர் தற்போது 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை விரட்ட இந்திய அணி விளையாடி வருகிறது.

Jemieson

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக 10 ஆவது வீரராக இறங்கிய ஜேமிசன் திகழ்ந்தார். 24 பந்துகளில் 25 குவித்தார் இதில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். குறிப்பாக 10 ஆவது விக்கெட்டுக்கு டெய்லர் மற்றும் ஜெமிசன் ஆகியோர் இணைந்து 54 பந்துகளில் 76 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement