சொன்னபடியே விராட் கோலியை ஆட்டமிழக்க வைத்து பெவிலியன் அனுப்பிய நியூசி வீரர் – விவரம் இதோ

Jamieson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தற்போது சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் இரண்டாம் நாளில் முதலில் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க துவங்கியது. ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை தந்தனர்.

kohli 1

- Advertisement -

அதன்பின்னர் புஜாரா விரைவில் ஆட்டமிழந்து வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் ரஹானே ஆகியோர் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடியும் வரை மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் கோலி 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் மேலும் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 44 ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன் பின்னர் நிதானமாக விளையாடி வந்த ரஹானேவும் 49 ரன்களுக்கு ஆட்டம் இருந்து வெளியேற பன்ட் 4 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு அடுத்து வந்த வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேற தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை 217 ரன்களுக்கு முடித்துக்கொண்டது.

Jamieson 1

நியூசிலாந்து அணி சார்பாக கையில் ஜேமிசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே இந்த இறுதிப் போட்டிக்கு முன்னர் நியூசிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி கூறுகையில் : விராட் கோலிக்கு எதிராக நிச்சயம் ஜேமிசன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவரை ஆட்டமிழக்க வைப்பார் என்று தெரிவித்து இருந்தார்.

Jamieson 2

அவர் கூறியதைப் போன்றே தற்போது இன்றைய போட்டியில் கோலியை ஆட்டமிழக்க வைத்து பெவிலியனுக்கு அனுப்பியது மட்டுமின்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியில் கேப்டன் விராத் கோலியின் கீழ் ஜேமிசன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement