INDvsNZ : டெஸ்ட் தொடருக்காக தயாராக டி20 தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – வெளியான அறிவிப்பு

nz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இன்று துவங்கும் இந்த தொடரானது 5 நாட்களுக்குள்ளேயே 3 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற இருக்கிறது. 17-ஆம் தேதி முதல் போட்டியும், 19-ஆம் தேதி இரண்டாவது போட்டியும், 21-ஆம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெற இருக்கின்றன. இப்படி அடுத்தடுத்து போட்டிகள் இருப்பதன் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து இந்திய அணியிலும் சரி, நியூசிலாந்து அணியிடம் சரி சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

INDvsNZ

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் அனுபவ வீரர்களான விராட் கோலி, பும்ரா, ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்ட வேளையில் நியூசிலாந்து அணி சார்பாக கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த டி20 தொடரில் இருந்து விலகப் போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனை தொடர்ந்து அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் இந்த டி20 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த விலகலை நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் உறுதிசெய்தார். அதன்படி அவர் கூறுகையில் : நாங்கள் டெஸ்ட் தொடருக்கான தயாராகும் வகையில் வில்லியம்சனுக்கும், ஜேமிசனுக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வு அளித்துள்ளோம்.

Jamieson 1

மேலும் அவர்கள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டி இந்த ஓய்வு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட வருவதால் அவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள் என்பதால் இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அனுபவ வீரரா இருந்தாலும் இன்னைக்கு இவருக்கு மட்டும் வாய்ப்பு குடுத்துடாதீங்க ப்ளீஸ் – ரசிகர்கள் கோரிக்கை

மேலும் ஐந்து நாட்களில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளதால் அணியை சுழற்சி முறையில் விளையாட வைக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை தவறவிட்ட நியூசிலாந்து அணி அந்த தோல்வியில் ஏற்பட்ட காயம் கூட ஆறாத நிலையில் இந்திய அணிக்கெதிரான தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement