13 ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்கு தொடரும் சோகம். மோசமான புள்ளிவிவரம் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இதுவரை இந்தியாவில் ஐபிஎல் தொடர் 12 வருடங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது 13வது ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மூன்று அணிகள் தான் தங்களது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. இதில் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், கொல்கத்தா 2 முறையும் கோப்பையை கைப்பற்றி தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

kxip

அதனை தாண்டி டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்று இருக்கின்றன. பெங்களூரு, டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த அணிகள் வருடாவருடம் தங்களது அணிகளை மற்றும் அணி கட்டமைப்பை கேப்டனை மாற்றிக் கொண்டே வருகின்றன.

- Advertisement -

இந்த முறையும் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பெங்களூரு அணி டெல்லி எது என அனைத்தும் தங்களது வீரர்களை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அப்படித்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த பதிமூன்று தொடர்களில் 12 கேப்டன் மாற்றியுள்ளது. அடுத்தடுத்த இடங்களை மாற்றி கொண்டே வந்து அணியை அணி கட்டமைப்பை ஒரு நிலையில் இல்லாமல் வைத்து சீரழித்து விட்டது என்றே கூறலாம்.

Rahul

இப்படித்தான் இந்த முறை கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் முதல் போட்டியில் தோற்று விட்டார். இனி வரும் போட்டிகளில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

1. ஆடம் கில்கிறிஸ்ட் – 34 போட்டிகள் – 17 வெற்றிகள்

2. ஜார்ஜ் பெய்லி – 16 போட்டிகள் – 14 வெற்றிகள்

- Advertisement -

3. யுவராஜ் சிங் – 29 போட்டிகள் – 17 வெற்றிகள்

4. ரவிச்சந்திரன் அஸ்வின் – 28 போட்டிகள் – 12 வெற்றிகள்

- Advertisement -

5. கிளன் மேக்ஸ்வெல் – 14 போட்டிகள் – 7 வெற்றிகள்

6. குமார் சங்கக்காரா – 13 போட்டிகள் 3 வெற்றிகள்

7. டேவிட் ஹசி – 12 போட்டிகள் 6 வெற்றிகள்

8. முரளி விஜய் – 8 போட்டிகள் 3 வெற்றிகள்

9. டேவிட் மில்லர் – 6 போட்டிகள் 1 வெற்றி

10. மகேலா ஜெயவர்தனே – 1 போட்டி 1 தோல்வி

11. விரேந்திர சேவாக் – ஒரு போட்டி, 1 வெற்றி

12. கே.எல்.ராகுல் (நடப்பு கேப்டன்) – 1 தோல்வி

Advertisement