பஞ்சாப் அணிக்கு எதிரான பெங்களூரு அணியின் இந்த படுதோல்விக்கு காரணம் இதுதான் – முழு ரிவியூ இதோ

kxip
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 6-வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

kxipvsrcb

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்களை வைத்தார். அதை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் முடிவில் 109 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

இதன் மூலம் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் தேர்வானார். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது பெங்களூர் அணியின் முடிவை படுகுழியில் தள்ளும் என்று கோலி நினைத்துக் கூட இருக்க மாட்டார். ஏனெனில் பஞ்சாப் அணியின் துவக்க வீரரான கேப்டன் ராகுல் ஒரு சுழன்று சுழன்று ஏழு சிக்சர்கள், 14 பவுண்டரிகள் என 69 பந்துகளில் 132 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தார். மேலும் அவருடைய இந்த ரன்னையே பெங்களூர் அணி திருப்பி அடிக்கவில்லை.

agarwal 1

அதே நேரத்தில் பெங்களூரு அணியில் பவுலர்களில் துபே மட்டுமே 2 விக்கெட்டுகளை எடுத்தார். மற்றபடி பெரிதாக யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை. கோலியோ ராகுலுக்கு 80 ரன்னில் ஒரு முறையும், 90 ரன்னில் ஒரு முறையும் இரண்டு முறை கேட்சை தவற விட்டார். பெங்களூரு அணிக்கு அது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன் நான்கு ஓவர்கள் வீசிய ஸ்பெயின் 57 ரன்களை வாரி வழங்கினார். உமேஷ் யாதவ் 3 அவர்களுக்கு 35 ரன்கள் வழங்கினார். நவ்தீப் சைனி 37 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

rahul 4

இவை அனைத்தும் பெங்களூர் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. மேலும் சாஹல் தவிர வேற ஒரு பவுலர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக வீசுவது கிடையாது. பவுலிங்கில் தான் சொதப்பல் என்றால் பேட்டிங் இம்முறை படுமோசம். வாஷிங்டன் சுந்தர் மட்டுமே 30 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி யாரும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. பஞ்சாப் அணி பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் அசத்தி அவர்களது வெற்றியை நியாயப்படுத்திய உள்ளது என்றும் கூறலாம்.

Advertisement