17 வயது பச்சை மண்ணை சூறையாடிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்.. மோசமான சாதனை படைத்த மும்பை வீரர்

Kwena Maphaka
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் மும்பையை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அபிஷேக் ஷர்மா 63, டிராவிஸ் ஹெட் 62, ஹென்றிச் க்ளாஸென் 80*, ஐடன் மார்க்ரம் 42* ரன்கள் எடுத்த உதவியுடன் 277/3 ரன்கள் குவித்தது.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் வரலாற்றை ஹைதராபாத் படைத்தது. பின்னர் 278 ரன்களை துரத்திய மும்பைக்கு இசான் கிசான் 34, ரோஹித் சர்மா 26, நமன் திர் 30, திலக் வர்மா 64, டிம் டேவிட் 42* ரன்கள் எடுத்துப் போராடினர். ஆனாலும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி பாண்டியா தலைமையில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

மோசமான சாதனை:
குறிப்பாக பந்து வீச்சில் ஏராளமான ரன்களை வாரி வழங்கியதால் பேட்டிங்கில் போராடியும் முழுமூச்சுடன் போராடியும் மும்பை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மறுபுறம் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 2, ஜெய்தேவ் உனட்கட் 2 விக்கெட்டுகள் எடுத்து ஹைதராபாத் முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முக்கிய பங்காற்றிய அசத்தினர்.

முன்னதாக இந்த போட்டியில் மும்பை அணிக்காக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 17 இளம் வீரர் க்வெனா மபாகா அறிமுகமாக களமிறங்கினார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற 2024 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார். அத்துடன் வருங்காலங்களில் பும்ராவை மிஞ்சி விராட் கோலியின் விக்கெட்டையும் எடுப்பேன் என்று அவர் தெரிவித்தது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே 6, 6, 4, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசிய டிராவிஸ் ஹெட் அவரை சீனியர் கிரிக்கெட்டுக்கு வரவேற்றார். அதே போல போட்டி முழுவதும் அவருடைய பந்துகளை ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் சூறையாடினர். அந்த வகையில் ஆரம்பம் முதலே மோசமாக பந்து வீசிய மபாகா 4 ஓவரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 66 ரன்கள் வாரி வழங்கினார்.

இதையும் படிங்க: எனக்கு அதான் ஹெல்ப் பண்ணுச்சு.. இஷான் கிசான் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு.. ஆட்டநாயகன் அபிஷேக் ஷர்மா மெசேஜ்

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே அதிக ரன்களை வாரி வழங்கி மோசமான பவுலிங்கை (0/66) பதிவு செய்த வீரர் என்ற பரிதாப சாதனையை மபாகா படைத்தார். இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக விளையாடிய மைக்கேல் நீசர் தன்னுடைய அறிமுக போட்டியில் விக்கெட் எடுக்காமல் 62 ரன்கள் வாரி வழங்கியதே முந்தைய மோசமான சாதனையாகும்.

Advertisement