எனக்கு அதான் ஹெல்ப் பண்ணுச்சு.. இஷான் கிசான் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு.. ஆட்டநாயகன் அபிஷேக் ஷர்மா மெசேஜ்

Abishek Sharma
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் மும்பையை 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதெராபாத் வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 277/3 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62, அபிஷேக் சர்மா 63, ஐடன் மார்க்ரம் 42*, ஹென்றிச் க்ளாஸென் 80* ரன்கள் குவித்தனர்.

அதைத்தொடர்ந்து 278 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 26, இசான் கிசான் 34, நமன் திர் 30, திலக் வர்மா 64 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவுட்டானார்கள். அதனால் கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக 42 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை போராடி தோல்வியை சந்தித்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக ஜெயதே உனட்கட் மற்றும் கேப்டன் கமின்ஸ் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

லாராவின் அட்வைஸ்:
இந்த வெற்றிக்கு 16 பந்துகளில் 50 ரன்கள் அதிவேகமாக அரை சதம் அடித்த ஹைதராபாத் வீரர் என்ற சாதனை படைத்து அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதால் கிடைத்த தன்னம்பிக்கை தான் தம்முடைய அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என்று அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.

சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் இசான் கிசான் விளையாடாததால் இந்திய அணியின் சம்பள ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த சூழ்நிலையில் உள்ளூர் போட்டிகள் தான் தமக்கு உதவியதாக தெரிவிக்கும் அபிஷேக் ஷர்மா ஜாம்பவான் பிரைன் லாராவுடன் நேற்றிரவு பேசியது உதவி செய்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதை கடந்த பேட்டியிலும் நான் தெரிவித்தேன். உள்ளூர் போட்டிகள் தான் எங்களுக்கு அதிகமான தன்னம்பிக்கையை கொடுக்கிறது. அதை வைத்து களத்திற்கு சென்று உங்களை வெளிப்படுத்துங்கள் என்பதே பேட்ஸ்மேன்களுக்கான மெசேஜாகும். என்னுடைய திட்டம் அட்டாக் செய்வதாக இருந்தது. டிராவிஸ் ஹெட் போன்ற எனக்கு மிகவும் பிடித்த ஒருவருடன் சேர்ந்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரை நான் ரசிக்கிறேன்”

இதையும் படிங்க: 17 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ

“உன்னுடைய இடத்தில் பந்து வந்தால் அடி என்று அவர் என்னிடம் சொன்னார். எந்த இடமாக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பால் நான் மகிழ்கிறேன். நேற்று இரவு பிரைன் லாராவிடம் பேசியது எனக்கு அதிகமாக உதவியது. வலைப்பயிற்சியில் நான் பேட்டிங்கை விட பவுலிங்கில் அதிகமாக கவனம் செலுத்துகிறேன். எனவே பந்து வீச்சிலும் என்னுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement