17 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ

SRH
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 8-ஆவது லீக் ஆட்டமானது பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது துவக்கத்திலிருந்து அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது.

- Advertisement -

சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62 ரன்களையும், அபிஷேக் சர்மா 63 ரன்களையும், கிளாசன் 80 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அப்படி நிர்ணயிக்கப்பட்ட இமாலய இலக்கினை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் குவித்து போராடி தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சன்ரைசர்ஸ் அணியானது கடந்த 17 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய சில சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி பவர்பிளே ஓவர்களிலேயே 81 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணி சார்பாக பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை இன்று பதிவு செய்தது.

இதையும் படிங்க : 523 ரன்ஸ்.. ஐபிஎல் வரலாறு காணாத சாதனை படைத்த போட்டியில்.. போராடிய மும்பையை வீழ்த்திய ஹைதெராபாத்

அதோடு மட்டுமில்லாமல் இந்த 17 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஏழு ஓவர்களில் 102 ரன்களை முதல் முறையாக குவித்து அசத்திய ஹைதராபாத் அணி 10 ஓவர்களில் 148 ரன்களை குவித்து முதல் 10 ஓவர்களில் அதிக ரன்களை விளாசிய அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement