சென்னைல இது நடக்காம போனா தோனி ரிட்டயர்டு ஆகப்போறாருனு அர்த்தம் – தோனியின் ஓய்வு குறித்து பேசிய சங்ககாரா

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது அவருக்கு 39 வயதாகிவிட்டது. இதன் காரணமாக சீக்கிரத்தில் ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இதனை வைத்து பல விவாதங்கள் விமர்சனங்கள் எழுந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றும் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரா தோனியின் ஓய்வு குறித்து வித்தியாசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்..
.ஓய்வு குறித்து ஒவ்வொரு வீரர்களும் முடிவு எடுப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் இது வீரருக்கு வீரர் மாறுபடும்.

சில நேரங்களில் வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் .பல நேரங்களில் அறிவிக்க மாட்டார்கள். ஒரு சில வீரர்கள் இது குறித்து அறிவிக்க வேண்டாம், செய்தி குறிப்பு வெளியிட வேண்டாம் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் ஓய்வு குறித்து முடிவெடுத்துவிட்டால் தானாக எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக விலகிக் கொள்வார்கள்.

dhoni

அதுபோன்ற விவாதங்களை மக்களிடமே விட்டுவிடுவார்கள். அதேபோல் தோனி தான், இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறோம், என்பதை மக்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அவருக்கு எது சிறந்தது என்று அவருக்கே தெரியும்

- Advertisement -

மேலும் அவரை அணியில் எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவை கிரிக்கெட் வாரியத்திடம் விட்டுவிட்டார். மேலும் அணியின் வழிமுறைகளை கடுமையாக மதிக்கிறார். இந்திய அணிக்காக தேர்வாகவில்லை என்றாலும் அவர் பெரிதாக கவலைப்பட மாட்டார் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்று தான் நினைக்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார் குமார் சங்கக்காரா.

Dhoni

மேலும் பேசிய அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் சி.எஸ்.கே அணிக்காக தொடர்ந்து ஆடுவார். அப்படி எப்போது அவர் சி.எஸ்.கே அணியின் பயிற்சியில் பங்கேற்க சென்னை வராமல் போகிறாரோ அப்போது தெரிஞ்சிக்கலாம் அவர் ஓய்வு முடிவை எடுத்துவிட்டார் என்று சங்ககாரா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement