தொடர்ந்து சான்ஸ் பெறுவதற்கு இலங்கை தொடரில் அதை செய்ங்க – சஞ்சு சாம்சனுக்கு சங்கக்காரா சூப்பர் அட்வைஸ்

- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா களமிறங்குகிறது. அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிகளில் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக செயல்பட உள்ளனர். அந்த 2 அணிகளிலும் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே போல் சமீப காலங்களில் தடவலாக செயல்பட்டு இந்தியாவின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்த கேஎல் ராகுல் டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே சமயம் சிறப்பாக செயல்பட்டும் ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன் முதலில் நடைபெறும் டி20 தொடரில் மட்டும் தேர்வாகியுள்ளார். அத்தொடரில் ரிசப் பண்ட் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே இல்லாத காரணத்தால் நிச்சயமாக அவருக்கு 3 போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த 2015இல் அறிமுகமானாலும் 4 வருடங்கள் கழித்து 2வது போட்டியில் விளையாடிய அவலத்தை சந்தித்த சஞ்சு சாம்சன் 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று இந்திய அணியில் குப்பையை போல் பயன்படுத்தப்பட்டு வந்தார்.

- Advertisement -

சங்ககாராவின் அட்வைஸ்:
இருப்பினும் மனம் தளராமல் போராடி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டு இந்த வருடம் இந்தியாவுக்காக முதல் முறையாக அரை சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்று கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கிறார். இந்நிலையில் இலங்கை டி20 தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்படாமல் மிகவும் ரிலாக்ஸாக பொறுமையாக அமைதியாக செயல்படுமாறு சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் மற்றும் ராஜஸ்தான் பயிற்சியாளர் குமார் சங்ககாரா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் தனது திறமையை நிரூபிக்க இதுதான் கடைசி வாய்ப்பு என்று எண்ணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே இத்தொடரில் அவர் செய்யக்கூடாத விஷயமாகும். அவர் அனைத்தையும் எளிமையாக கடைபிடித்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இங்கே ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது”

- Advertisement -

“குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடும் போது சஞ்சு சாம்சன் தமக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு களமிறங்கும் போது நிதானமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி செயல்பட போகிறீர்கள் என்ற தெளிவு உங்களிடம் உள்ளது. மேலும் தாம் விரும்பாவிட்டாலும் அணி நிர்வாகம் விரும்பக்கூடிய இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு தான் அவருக்கு கிடைக்கும். அவர் 5 மற்றும் 6 அல்லது டாப் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படும் அளவுக்கு சக்தி மற்றும் மனநிலை ஆகியவற்றைப் பெற்றுள்ளார்”

“அவர் ஒரு அற்புதமான திறமை கொண்ட இளம் வீரர். அதைத் தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக சண்டையிட வேண்டாம். போட்டி நாளில் உங்களை நோக்கி என்ன வருகிறதோ அதற்கு ஏற்ப உங்களை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் விளையாடுவதை அனுபவித்து மகிழ்ச்சியாக பாருங்கள். நீங்கள் நன்றாக விளையாடும் வரை உங்கள் முடிவுகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் கிரிக்கெட்டை நீங்கள் அனுபவிக்க முடியும்”

இதையும் படிங்கப்ரெண்டன் மெக்கல்லமை மிஞ்சி வரலாறு படைத்த வில்லியம்சன், ஆசிய வீரர்களை தாண்டி முதல் வெளிநாட்டு வீரராக புதிய உலக சாதனை

“சஞ்சுவைப் பொறுத்த வரை அது முழுமையான உண்மை. தன்னிடம் இருக்கும் திறமைக்கேற்ப விளையாடினால் அவர் தன்னுடைய கிரிக்கெட்டை ரசிக்கப் போகிறார். இந்த இளம் வீரரால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க அவருக்கும் ரசிகர்களுக்கும் இது ஒரு அற்புதமான வாய்ப்பு. ஏனென்றால் அவர் ஒரு சிறப்பு திறமையானவர்” என்று கூறினார்.

Advertisement