ப்ரெண்டன் மெக்கல்லமை மிஞ்சி வரலாறு படைத்த வில்லியம்சன், ஆசிய வீரர்களை தாண்டி முதல் வெளிநாட்டு வீரராக புதிய உலக சாதனை

Kane Williamson Brendon Mccullam
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நடப்பு டெஸ்ட் சாம்பியனாக திகழும் அந்த அணி 2023 ஜூன் மாதம் நடைபெறும் பைனல் வாய்ப்பை ஏற்கனவே நழுவ விட்டதை போலவே சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோற்ற பாகிஸ்தானும் ஃபைனல் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. அந்த நிலையில் டிசம்பர் 26ஆம் தேதியன்று கராச்சியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 438 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 161 ரன்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது 86 ரன்களும் எடுக்க இளம் வீரர் ஆஹா சல்மான் 103 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு 183 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் தேவோன் கான்வே 92 ரன்களும் டாம் லாதம் சதமடித்து 113 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் நங்கூரமாக நின்ற நிலையில் எதிர்புறம் ஹென்றி நிக்கோலஸ் 22, டார்ல் மிட்சேல் 42, டாம் ப்ளன்டல் 47 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ரன்களை குவித்து அவுட்டானார்கள்.

- Advertisement -

அபார உலக சாதனை:
அவர்களுக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு சதமடித்த வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த டெயில் எண்டர் இஷ் சோதி 7வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கேன் வில்லியம்சன் 21 பவுண்டரி 1 சிக்சருடன் இரட்டை சதமடித்து 200* (395) ரன்கள் குவித்த போது 612/9 ரன்களில் நியூசிலாந்து தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதைத்தொடர்ந்து 180 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் 4வது நாள் முடிவில் 77/2 ரன்களுடன் இப்போட்டியை டிரா செய்வதற்கு போராடி வருகிறது.

முன்னதாக விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் கேன் வில்லியம்சன் கடைசியாக 2021இல் இதே பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 238 ரன்கள் விளாசினார். அதன் பின் சந்தித்த எல்போ காயத்தால் பார்மை இழந்து பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் சந்தித்த விமர்சனங்களுக்கு ஒரு வழியாக 772 நாட்கள் கழித்து இப்போட்டியில் சதமடித்த அவர் பதிலடி கொடுத்து நிம்மதியடைந்தார்.

- Advertisement -

1. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் சதமடித்துள்ள அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 9 வெவ்வேறு நாடுகளில் சதமடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 வெவ்வேறு நாடுகளில் சதமடித்த முதல் ஆசிய கண்டத்தை சேராத வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே இன்னும் அவர் சதமடிக்கவில்லை.

2. வரலாற்றில் முதல்முறையாக இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் தான் 10 வெவ்வேறு நாடுகளில் சதமடித்தார். அவருக்குப் பின் மகிளா ஜெயவர்த்தனே, முகமது யூசுப், சயீத் அன்வர், குமார் சங்ககாரா, ஆகியோரும் அந்த சாதனை படைத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் மிஞ்சிய பாகிஸ்தானின் யூனிஸ் கான் 11 வெவ்வேறு நாடுகளில் சதமடித்து ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ளார். தற்போது அவர்களது வரிசையில் இணைந்துள்ள வில்லியம்சன் 10 வெவ்வேறு நாடுகளில் சதமடிக்கும் முதல் வெளிநாட்டு வீரராக வரலாறு படைத்துள்ளார்.

இதையும் படிங்கசும்மா சொல்லலங்க உண்மையிலே அவர் சூப்பரா பவுலிங் பண்ணாரு – கம்பேக் கொடுத்த வீரரை பாராட்டிய அஷ்வின்

3. அத்துடன் 5வது இரட்டை சதமடித்துள்ள கேன் வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற ப்ரெண்டன் மெக்கல்லம் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் அதிகபட்சமாக பிரெண்ட் மெக்கெல்லம் 4 இரட்டை சதங்களும் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் தலா 3 இரட்டை சதங்களும் அடித்துள்ளனர்.

Advertisement