சும்மா சொல்லலங்க உண்மையிலே அவர் சூப்பரா பவுலிங் பண்ணாரு – கம்பேக் கொடுத்த வீரரை பாராட்டிய அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரை இந்திய அணியானது (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு முக்கியம் காரணமாக தமிழக வீரர் அஷ்வின் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.

அதுமட்டுமின்றி பவுலிங்கில் 6 விக்கெட்டை வீழ்த்திய அவர் பேட்டிங்கிலும் முக்கியமான கடைசி இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினையும் பெற்று அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த இந்த போட்டியில் கம்பேக் கொடுத்த ஜெயதேவ் உனட்கட்டின் பந்துவீச்சை பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் இந்த டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்கு பின்னர் ஜெயதேவ் உனட்கட்டிடம் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற்ற கோப்பையை கையில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.

ஏனென்றால் அவர் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும் சௌராஷ்ட்ரா அணிக்கு செய்ததை வைத்து பார்த்தால் நீ அனைத்திற்கும் தகுதியானவன் தான் என கூறினேன். உனட்கட் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அனுபவம் வாய்ந்த தொழில் முறை பந்துவீச்சாளர் போல் பந்து வீசினார்.

- Advertisement -

இப்படி அவர் கம்பேக் கொடுத்து சிறப்பாக பந்துவீசுவது அது எளிது கிடையாது. அனைவருக்கும் ஒயிட் பாலில் உனட்கட் எப்படி பந்து வீசுவார் என்பது நன்றாகவே தெரியும். ராஜஸ்தான் அணிக்காக இவர் அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை ஆனால் இவருடைய ரெட்பால் பந்துவீச்சு இவர் யார் என்பதை நமக்கு காட்டும் என்று அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs SL : தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ப்ரித்வி ஷா வெளியிட்ட பதிவு – என்ன இப்படி சொல்லறீங்க

கடந்த 2010-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஜெயதேவ் உனட்கட் அதற்கு அடுத்து 12 ஆண்டுகள் கழித்து இந்த வங்கதேச தொடரில் தான் தனது 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement