IND vs SL : தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ப்ரித்வி ஷா வெளியிட்ட பதிவு – என்ன இப்படி சொல்லறீங்க

Prithvi
- Advertisement -

இந்திய அணி அண்மையில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. பின்னர் அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அந்தவகையில் இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த இரு தொடருக்குமான இந்திய அணியை நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

- Advertisement -

அப்படி வெளியான இந்திய வீரர்களின் பட்டியலில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான அணியில் சீனியர் வீரர்கள் பலரும் இடம்பெறாத வேளையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியே விளையாட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் தொடருக்கான அணியில் முதன்மை வீரர்கள் பலரும் அணியில் இணைகின்றனர்.

அப்படி இந்த தொடருக்கான அணியில் பல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ப்ரித்வி ஷாவுக்கு 2 அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ப்ரித்வி ஷா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போது இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறுவார் என்று பலரும் கூறியவேளையில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தனது வாய்ப்புக்காக உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி தனது பார்மை நிரூபித்தாலும் வாய்ப்புக்காக அவர் காத்திருக்க வேண்டிய நிலையிலே தான் உள்ளார். அந்தவகையில் இந்த இலங்கை அணிக்கெதிரான தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க : PAK vs NZ : உலகத்தரமான ஃபேஸ் பேட்டரிக்கு என்னாச்சு? 2 பரிதாப சாதனையுடன் திணறும் பாகிஸ்தான் – கலாய்க்கும் ரசிகர்கள்

மேலும் இந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக ப்ரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரியில் குறிப்பிட்டதாவது : எனக்கு தேவைப்பட்ட வாய்ப்பு, வேறு ஒருவருக்கு இலவசமாக கிடைத்துள்ளது என்று தனது வருத்தத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisement