உ.கோ தொடரில் இந்திய அணிக்கு இந்த ரெண்டு அணிகள் மட்டுமே சவாலாக இருக்கும் – குல்தீப் யாதவ் பேட்டி

Kuldeep

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3- 2 என்ற கணக்கில் இழந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தது. இந்நிலையில் கடைசியாக இந்திய அணி சந்தித்த இந்த தோல்வி முன்னாள் வீரர்களால் விமர்சனத்துக்கு ஆளானது.

worldcup

இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது ஐ.பி.எல் தொடரில் விளையாட இந்திய அணி வீரர்கள் தயாராகை விட்டனர். இந்த ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் உலகக்கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் குல்தீப் கூறியதாவது : இந்திய அணி பல மாதங்களாக சிறப்பாக தொடர்ந்து ஆடி வருகிறது. இந்திய அணியிடம் கோப்பையை கைப்பற்றும் அனைத்து வலிமையையும் உள்ளது. வரப்போகும் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமே சவாலாக இருக்கும்.

kuldeep

மேலும், போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணிக்கு சூழல் சாதகமாக அமையும்.அதுமட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங் வரிசையும் பலம் வாய்ந்தது. மற்றும் பாகிஸ்தான் அணியும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறது என்றே நான் கருதுகிறேன். இதுவே என் கருத்து என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.