- Advertisement -
இந்திய கிரிக்கெட்

6 ஓவர் போட 6 மாசம் ஆச்சு.. முடியலயான்னு ரோஹித் பாய் கேட்பாரு.. 3 வருட கம்பேக் வலி பற்றி குல்தீப் பேட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அடுத்து நடைபெறும் 2வது போட்டியில் குல்தீப் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அந்தளவுக்கு தற்சமயத்தில் அவர் நல்ல ஃபார்மில் இருக்கும் தரமான ஸ்பின்னராக வலம் வருகிறார். 2016இல் அறிமுகமான குல்தீப் ஆரம்பக் காலங்களில் அஸ்வினை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு அற்புதமாக பவுலிங் செய்து இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். ஆனால் 2019 ஐபிஎல் தொடரில் மோசமாக அடி வாங்கிய அவர் காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

6 ஓவருக்கு 6 மாதம்:

அதனால் இந்தியா மற்றும் கொல்கத்தா அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட குல்தீப் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து குணமடைந்த அவரை ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் சேர்க்க முக்கிய பங்காற்றினார். அதைப் பயன்படுத்திய அவர் ரோஹித் தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு உதவினார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்த பின் 6 ஓவர்கள் கூட வீச முடியாத அளவுக்கு வலி இருந்ததாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். அதிலிருந்து மீண்டு வர 6 மாதங்கள் தேவைப்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது. பழைய ஆக்சனை வைத்து பவுலிங் செய்வது கடினமாக மாறியது”

- Advertisement -

முழுமையாக 3 வருடங்கள்:

“அதைத் தாண்டி ரிதத்தை பெறுவதற்கு ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டது. அந்த ரிதத்தை முழுமையாக பெறுவதற்கும் எனக்கு 6 மாதங்கள் தேவைப்பட்டது. புதிய ஆக்சனை பின்பற்றி பவுலிங் செய்ய எனக்கு நிறைய எனர்ஜியும் தேவைப்பட்டது. அதனால் என்னால் 4 – 5 ஓவர்களுக்கு மேல் பவுலிங் செய்ய முடியவில்லை. என்னுடைய ஓட்டம் மற்றும் அணுகுமுறை ஆக்ரோஷமாக இருந்ததால் டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசுவது கூட சவாலாக இருந்தது”

இதையும் படிங்க: முதல் போட்டியில் தவறவிடப்பட்ட கேட்ச்கள்.. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த தண்டனை – விவரம் இதோ

“அப்போது சோஹம் தேசாய் (ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் பயிற்சியாளர்) 6 ஓவர்கள் போட்டாலும் என்னுடைய எனர்ஜியை தக்க வைப்பதற்காக என்னைத் தயார்படுத்தினார். அந்த சமயங்களில் போட்டியின் போது “உன்னால் முடியவில்லையா?” என்று ரோகித் பாய் என்னிடம் கேட்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக தொடர் முயற்சியின் காரணமாக இப்போது என்னால் தொடர்ந்து 8 – 9 ஓவர்களை வீச முடிகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஒரே சமயத்தில் 10 – 12 ஓவர்களை வீச முடிகிறது. இவற்றை செய்ய எனக்கு 3 வருடங்கள் தேவைப்பட்டது” என்று கூறினார்.

- Advertisement -