தோனி மாதிரியே இவரும் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்றாரு. அதான் நான் நல்லா பவுலிங் போடுறேன் – குல்தீப் யாதவ் பேட்டி

kuldeep
- Advertisement -

இந்திய அணியைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் நிரந்தர இடம் இன்றி தவித்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் அவர் விளையாட ஒப்பந்தமாகி இருந்தாலும் பெரும்பாலும் வெளியிலேயே அமர வைக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக மனதளவில் சோர்ந்து இருந்த அவர் ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி சமீபத்தில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது அவரது கிரிக்கெட் கரியருக்கு மிக முக்கியமான ஆண்டாக பார்க்கப்பட்டது.

Kuldeep Yadhav

- Advertisement -

இவ்வேளையில் தற்போது இந்த ஆண்டு அவரது அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்ட அவர் தற்போது டெல்லி அணிக்காக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி மிகச்சிறந்த பந்துவீச்சாளராக டெல்லி அணிக்கு தனது பங்களிப்பை பிரமாதமாக வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தான் இப்படி டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட அவருக்கு அங்கு கிடைக்கும் நம்பிக்கையான வார்த்தைகள் காரணம் என்றும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தோனியை போல தன்னை சரியான திசையில் வழி நடத்துவதாகவும் குல்தீப் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சுழல் பந்துவீச்சாளர்களின் வெற்றியில் விக்கெட் கீப்பரின் பங்கும் மிக முக்கியம்.

kuldeep 1

அந்த வகையில் எனது கிரிக்கெட் கரியரின் ஆரம்பத்தில் தோனி எனக்கு எவ்வாறு உதவினாரோ அதே போன்று தற்போது ரிஷப் பண்ட் என்னை சரியான முறையில் வழிநடத்துகிறார். அதோடு அவரது ஆலோசனைகள் எனக்கு பெரிதளவு உதவுகின்றன. ஸ்டம்பிற்கு பின்னால் நின்று அவர் கொடுக்கும் யோசனைகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. களத்தில் தோனி என்னை எவ்வாறு வழிநடத்தினாரோ அதே போன்று இவரும் என்னை சரியாக வழி நடத்துவதால் என்னால் சிறப்பாக பந்து வீச முடிகிறது என்று குல்தீப் யாதவ் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் வாட்சனும் எனக்கு நிறைய உதவி செய்கிறார். அதுமட்டுமின்றி போட்டிக்கு போட்டி என்னிடம் வந்து நிறைய விடயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார். அதேபோன்று பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை நான் முதல் முறையாக சந்தித்தபோது : இந்த தொடரின் 14 போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீச வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினார்.

இதையும் படிங்க : உங்களுக்கு தான் மும்பை மாஸ் டீம், எனக்கு ஈசி டீம் ! விராட் உட்பட யாரும் படைக்காத புதிய சாதனை படைத்த – கேஎல் ராகுல்

இப்படி டெல்லி அணி நிர்வாகத்தினர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், அவர்கள் என் மேல் காட்டும் அக்கறையும் தான் என்னை சிறப்பாக பந்துவீச வைக்கிறது என்றும் ரிஷப் பண்டின் தலைமையில் விளையாடுவது மகிழ்ச்சியாகவும் உள்ளதாக குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement