
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு பெறாமல் வெளியிலேயே அமர்ந்திருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளரின் தேவை அதிகம் இருக்காது என்பதனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆல்ரவுண்டர்களே அந்த தொடரில் விளையாடியிருந்தனர்.
இதன் காரணமாக முழுநேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவிற்கு அந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் தற்போது முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இடம் பிடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ள அவர் இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தனக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் எந்த ஒரு அணிக்காக விளையாடினாலும் அந்த அணியில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பவுலராக மட்டுமே விளையாடி வருகிறேன். அப்படி ஒரு ஸ்பெஷலிஸ்ட் பவுலராக நான் விளையாடும் போது விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டியது. அதுதான் என் வேலை என்பது எனக்கு தெரியும்.
ஒருவேளை நான் விக்கெட் எடுக்கவில்லை என்றால் நிச்சயம் எனக்கு அந்த அணியில் இடம் இருக்காது. எனவே ஒரு முழுநேர பந்துவீச்சாளராக நான் எப்போதுமே விக்கெட் எடுத்து அணிக்கு எனது பங்களிப்பை வழங்க நினைக்கிறேன். சில சமயங்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்காத போது எனக்கு தெளிவான விளக்கம் வழங்கப்படும்.
இதையும் படிங்க : கே.கே.ஆர் அணி செய்த இந்த விடயத்திற்காக நான் எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன் – ரிங்கு சிங் நெகிழ்ச்சி
இருந்தாலும் அந்த சூழலில் போட்டியை வெளியில் இருந்து பார்த்து எவ்வாறு அழுத்தமான சூழ்நிலைகளை சமாளிக்கலாம் என்பது குறித்து திட்டத்தை வகுக்க அது எனக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது என்றும் குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.