- Advertisement -
இந்திய கிரிக்கெட்

18 மாசம் கழிச்சு 5 விக்கெட்ஸ் எடுக்க இதான் என் திட்டம்.. இதை செஞ்சு வெ.இஸை நாளை மடக்குவோம்.. குல்தீப் பேட்டி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸை நேர்த்தியாக பந்து வீசிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக 270 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா மீண்டும் வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்யுமாறு ஃபாலோ ஆன் கொடுத்தது.

- Advertisement -

குல்தீப் அசத்தல்:

அதை அடுத்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் 3வது நாள் முடிவில் 173/2 ரன்கள் எடுத்துள்ளது. சந்தர்பால் 10, அலிக் அதனாஸ் 7 ரன்களில் அவுட்டானாலும் ஷாய் ஹோப் 66*, ஜான் கேம்பல் 87* ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். இன்னும் 97 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணி இத்தொடரில் முதல் முறையாக இந்தியாவுக்கு சவாலைக் கொடுக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் ஸ்டம்ப்புகளை நோக்கிய லைனில் பந்தை வீசியதே முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுக்க உதவியதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 2வது இன்னிங்ஸில் பிட்ச் வேகமற்று இருப்பதால் வெஸ்ட் இண்டீஸை சுருட்ட புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாகத் துவங்கினோம். பிட்ச்சில் வேகம் இல்லை என்பதால் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கிறது”

- Advertisement -

புதிய திட்டம்:

“எனவே நாங்கள் சரியான லென்த்தில் பந்தை போட முயற்சிக்கிறோம். ஸ்டம்ப்களை அடிப்பதை என்னுடைய திட்டம். முதல் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்த போதிலும் 2வது இன்னிங்ஸில் ஹோப் – கேம்பல் நன்றாக பேட்டிங் செய்கின்றனர். தற்சமயத்தில் அவர்கள் நன்றாக விளையாடும் நிலையில் ஆடுகளமும் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கிறது. அது கொஞ்சம் வேகம் இல்லாமல் ஸ்லோவாக இருக்கிறது. எனவே எனர்ஜியை நீங்கள் உருவாக்க வேண்டும்”

இதையும் படிங்க: அழிந்து கொண்டிருந்த அந்த விளையாட்டுக்கு உயிர் கொடுத்ததே சேவாக் தான் – விவியன் ரிச்சர்ட்ஸ் புகழாரம்

“இது போன்ற சூழ்நிலைகள் சில நேரங்களில் இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர்களுக்கு கடினமாக இருக்கும். அங்கே சரியான லென்த்தில் பந்தை போட்டு பேட்ஸ்மேன்களை காற்றில் வீழ்த்துவதே என்னுடைய திட்டம். 18 மாதங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதால் இப்போதெல்லாம் எந்தப் பந்தை போடுவது என்று நான் சிந்திக்கிறேன். அனைத்து ஃபார்மெட்டிலும் என்னுடைய நல்ல செயல்பாடுகளைக் கொடுக்க விரும்புகிறேன். 5 விக்கெட்டுகள் எடுத்தது ஸ்பெஷல். 18 அல்லது ஒரு மாதம் கழித்து விளையாடினாலும் நீங்கள் களத்தில் மேஜிக்கை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -