
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நியூசிலாந்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி ஸ்ரேயஸ் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 347 ரன்களை குவித்தது.
இதன்பின்னர் 348 என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி அற்புதமாக ஆடி 49வது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. இதே போட்டியில் அபாரமாக ஆடிய ராஸ் டெய்லர் சதம் அடித்து அசத்தினார்.
இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சரியில்லை. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீசவில்லை. வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் நன்றாக வீசினர். ஆனால் சுழற்பந்து வீச்சாளரான புதிய ரன்களை வாரி வழங்கினார்.
குல்தீப் அவரது 10 ஓவர்களில் மொத்தம் 84 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இவ்வாறு ரன்களை வாரி வழங்கியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரின் மோசமான பந்துவீச்சுக்கான பட்டியலில் இணைந்துள்ளார். ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகமாக ரன்களை வழங்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் குல்தீப்.
முன்னதாக கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக சாஹல் 88 ரன்களும், பியுஷ் சாவ்லா 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 85 ரன்களையும் விட்டுக்கொடுத்திருந்தனர். தற்போது 84 ரன்கள் விட்டுக்கொடுத்து அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து மோசமான சாதனையில் இணைந்துள்ளார் குல்தீப்.