தோனியை போன்று நானும் ஐ.பி.எல் போட்டிகளில் சாதித்து அணியில் இடம்பிடிப்பேன் – இளம்வீரர் சவால்

kuldeep-yadav
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் லிமிட்டட் ஓவர் தொடரில் மிக முக்கியமான அங்கமாக இருந்தவர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஜோடி இந்த இருவரும் ஆடும் அணியில் இணைந்து பந்து வீசினால் எதிரணியை எப்படியும் காலி செய்து விடுவார்கள் .

Chahal

- Advertisement -

அந்த அளவிற்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவ்வாறு வீசிக்கொண்டிருந்தனர். சமீபகாலமாக குறிப்பாக சென்ற ஐபிஎல் தொடரில் இருந்து குல்தீப் யாதவால் சரியான பந்து வீச முடியவில்லை. இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரவீந்திர ஜடேஜா அவரது இடத்தை அணியில் பறித்துக் கொண்டார்.

மேலும் தற்போது ஜடேஜாவின் பார்ம் வேற லெவலில் இருக்கிறது. அவர் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் பெரிய அளவில் தாக்கத்தை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சரியாக காண்பிக்கிறார். இதனால் தற்போது தொடர்ச்சியாக குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக ஆட முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஒவ்வொரு வீரரும் அதிகமான கிரிக்கெட்டில் விளையாடுவதையே விரும்புவார்கள். ஏனெனில் அதிகமாக விளையாடும் போது முன்னேற்றம் அதிகமாக கிடைக்கும். ஐபிஎல் தொடர் அவ்வாறுதான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் விளையாட வேண்டும். இதனால் அதிக முன்னேற்றம் கிடைக்கும் தற்போது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்கு தயாராக உள்ளேன். ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி இந்தியா டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் உலகக்கோப்பை தொடரில் ஜடேஜா இடம் பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

kuldeep1

மேலும் பேட்டிங் தெரிந்த சுழற்பந்து வீச்சாளர் டி20 போட்டிகளுக்கு அவசியம் என்பதால் தமிழக வீரரான வாஷிங்க்டன் சுந்தருக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement