ஆசியக்கோப்பை : கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் சேர்ப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Asia-Cup
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடரில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலகக்கோப்பை அணியில் விளையாடுவார்கள் என்பதனால் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வின் மீது அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது.

Deepak Chahar 1

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்ட விடயமாக மாறியது. ஏனெனில் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவர் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதோடு அணியில் கூடுதல் ஸ்டான்ட் பை வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் தீபக் சாகர் ஆவேஷ் கானை விட சிறந்த பந்துவீச்சாளர் என்பதால் அவரை முதன்மை இந்திய அணியில் இணைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரை முடித்த கே.எல்.ராகுல், தீபக் சாகர் மற்றும் தீபக் ஹுடா ஆகியோர் நேரடியாக அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம் சென்று இருந்தனர்.

kuldeep sen 1

இந்நிலையில் துபாய் சென்றடைந்த இந்திய அணியில் தீபக் சாகருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுகிறார் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு வேகபபந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்ற தகவலும் இன்று இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. ஆனால் இதனை மறுத்திருந்த பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில் : இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. தீபக்சாகர் தற்போது துபாயில் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சி செய்து வருகிறார்.

- Advertisement -

நேற்றைய பயிற்சி போட்டியிலும் சரி, இன்றைய பயிற்சி போட்டியிலும் சரி தீபக் சாகர் தொடர்ந்து பந்து வீசி வருகிறார். அவர் முழுஉடற் தகுதியுடன் நலமாக இருக்கிறார் என்று தெளிவான தகவலை அறிவித்தது. அதேவேளையில் இந்திய அணியில் கூடுதல் நெட் பவுலராக குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இம்முறை அவர் நல்ல பார்மில் இருக்காரு, பாகிஸ்தான் முடிஞ்சா மோதி பாக்கட்டும் – ரவி சாஸ்திரி அதிரடி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான குல்தீப் சென் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் அற்புதமாக பந்து வீசுவதால் அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement