இம்முறை அவர் நல்ல பார்மில் இருக்காரு, பாகிஸ்தான் முடிஞ்சா மோதி பாக்கட்டும் – ரவி சாஸ்திரி அதிரடி

Shastri
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக இன்னும் ஒருசில நாட்களில் துவங்குகிறது. 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் 6 அணிகள் களமிறங்கினாலும் வரும் ஆகஸ்ட் 28இல் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலகம் முழுவதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இலங்கை, வங்கதேசம் போன்ற இதர அணிகளை காட்டிலும் இவ்விரு அணிகளும் வலுவானதாக இருப்பதுடன் பரம எதிரிகளாக இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன.

INDvsPAK

- Advertisement -

அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகளில் அனல் பறக்கும் என்ற நிலைமையில் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் மோதிய போது வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய சரித்திரத்தை எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்தாலும் தங்களை உலகக்கோப்பையில் தோற்கடிக்க எதிரணிக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து பெருமைப்படும் அணியாகவே இந்தியா இருக்கிறது. ஆனால் கடந்த முறை தோல்விக்கு முக்கிய பங்காற்றிய ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் விலகியதால் இந்தியா தப்பித்த விட்டதாகவும் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கலாய்க்கிறர்கள்.

பார்மில் பாண்டியா:
அத்துடன் அவர் இல்லை என்றாலும் தங்களுடைய 2வது வீடாக கருதப்படும் துபாயில் இம்முறையும் இந்தியாவை தோற்கடிப்போம் என்றும் அவர்கள் சவால் விடுத்து வருகின்றனர். எனவே வாய் சவடால் செய்து வரும் பாகிஸ்தானுக்கு இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஃபார்மில் இல்லாததால் பாகிஸ்தானிடம் தோல்வியடைய நேரிட்டதாக அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

pandya

ஆனால் தற்போது அவர் ஃபார்மில் இருப்பதால் இம்முறை முடிந்தால் பாகிஸ்தான் மோதிப் பார்க்கட்டும் என்று தைரியமாக பேசியுள்ளார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 2019 உலககோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் தவித்ததுடன் பேட்டிங்கிலும் தடுமாறினார்.

- Advertisement -

மோதி பாருங்க:
இருப்பினும் உலககோப்பையில் பந்து வீசுவார் என்ற நம்பிக்கையுடன் அவரை தேர்வுக்குழு நம்பி தேர்வு செய்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு ஓவர்கூட வீசாத அவர் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது இந்தியாவுக்கு படுதோல்வியை பரிசளித்து லீக் சுற்றுடன் வெளியேற முக்கிய பங்காற்றியது. அதனால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அதன்பின் கடினமான பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் குஜராத்தை அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்து தன் மீதான விமர்சனங்களை உடைத்தார்.

Hardik Pandya 1

அதனால் இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் அதன்பின் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி பழைய ஃபார்முக்கு பழைய பாண்டியாவாக திரும்பியுள்ளார். எனவே இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவை பொருத்தவரை அவர் வெற்றி சக்கரத்தின் மிக முக்கியமான பற்களில் ஒருவர். அவரை அணியிலிருந்து வெளியே எடுத்தால் அணியின் சமநிலை கலைந்து விடும். அவர் அந்தளவுக்கு முக்கியமானவர். அவர் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் அல்லது எக்ஸ்ட்ரா பவுலர் என எந்த விதத்தில் அசத்துவார் என்று உங்களுக்கு தெரியாது. கடந்த வருட டி20 உலக கோப்பையில் அவரால் பந்து வீச முடியாமல் போனதால் நாங்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தோம்”

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாரா தீபக் சாகர் – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

“அவருடைய ஆட்டம்தான் வெற்றியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறது. மிடில் ஆர்டரில் விளையாடும் அவரது தரத்திற்கு நிகராக யாருமே அருகில் கூட வர முடியாது. இந்திய அணியில் மிகவும் முக்கிய வீரரான அவரை நீண்ட வருடங்கள் அருகிலிருந்து நான் பார்த்துள்ளேன். அடுத்ததாக நிறைய முக்கியமான போட்டிகள் வரும் நிலையில் அந்த அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் உங்களின் கடைசி வீரராக அவர் தான் இருப்பார்” என்று பாராட்டி பேசினார்.

Advertisement