ஆசியக்கோப்பை : இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாரா தீபக் சாகர் – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

Deepak-Chahar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதினால் அதற்கு தயாராகும் வகையில் இம்முறை ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்படும் என்றும் ஆசிய கண்டத்தினை சேர்ந்த ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Asia-Cup

- Advertisement -

அதன்படி இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணியைச் சேர்ந்த வீரர்களும் அறிவிக்கப்பட்டு தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த தொடருக்கான வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதே வேளையில் காயத்திலிருந்து மீண்டு வந்து தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வழங்கிய தீபக் சாகர் அணியில் ஸ்டான்ட் பை வீரராக இருக்கிறார்.

Deepak Chahar 1

ஆனால் ரசிகர்கள் பலரும் தீபக் சாகரை முதன்மை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் ஆவேஷ் கானை விட சிறந்தவர் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலையில் இருந்து ஒரு செய்தி சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்த செய்தி யாதெனில் :

- Advertisement -

தீபக் சாகருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அதன் காரணமாக அவர் இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவிக்கும் விதமாக பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியில் : தீபக் சாகருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் தற்போது துபாயில் இந்திய அணியுடன் பயிற்சி செய்து வருகிறார்.

இதையும் படிங்க : அந்த வீக்னெஸ் வெச்சு பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்து விடலாம் – இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ஆலோசனை

இதுபோன்ற தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் நன்றாக இருக்கும் ஒரு வீரரை ஏன் நாங்கள் அணியிலிருந்து நீக்க போகிறோம் என்று பிசிசிஐ தரப்பில் தெளிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement